பரிசாக வழங்கிய நாய்க்குட்டியை முத்தமிட்டு கொஞ்சிய ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புதின் தனக்கு பரிசாக கொடுக்கப்பட்ட நாய்க்குட்டி ஒன்றை தூக்கி கொஞ்சிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

ரஷ்யாவில் உள்ள Sochi நகரில் முக்கிய கூட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இக்கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் துர்க்மேனிஸ்தான் நாட்டு ஜனாதிபதி Gurbanguly Berdimuhamedov உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் இரு நாடுகளுக்கு மத்தியில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பின்னர், கூட்டத்தின் இறுதியில் துர்க்மேனிஸ்தான் ஜனாதிபதி நாய்க்குட்டி ஒன்றை கூண்டில் இருந்து வெளியே எடுத்துள்ளார்.

நாய்க்குட்டியை பார்த்த விளாடிமிர் புதின் இருக்கையில் இருந்து ஆவலாக எழுந்த சென்று அதனை வாங்கிக்கொள்கிறார்.

பின்னர், தனது மார்போடு அணைத்துக்கொண்ட புதின் நாய்க்குட்டியின் உச்சந்தலையில் முத்தமிட்டு கீழே இறக்கி விடுகிறார்.

நாய்கள் மீது அதிகளவில் பிரியம் வைத்துள்ள புதின் தனது கிரிம்ளின் அரண்மனையில் விலையுயர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

புதினின் விருப்பத்தை தெரிந்துக்கொண்ட துர்க்மேனிஸ்தான் ஜனாதிபதி தற்போது நாய்க்குட்டியை பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவை உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு வெளியானது