இரண்டு குழந்தைகளின் தாயை திருமணம் செய்கிறார் பென்ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென்ஸ்டோக்ஸ் தனது காதலியை இந்த வாரம் கரம் பிடிக்கிறார்.

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயாக இருக்கும் Clare Ratcliffe என்ற பெண்ணை காதலித்தார், தற்போது இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த திருமணம் Clare Ratcliffe-ன் வீட்டில் நடைபெரும் எனவும், வரவேற்பு நிகழ்ச்சி சோமர்செட் நகரில் உள்ள ஒரு விடுதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் வெற்றிக்கு பின்னர், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த நபர் ஒருவரை ஸ்டோக்ஸ் கடுமையாக தாக்கியதால், கைது செய்யப்பட்டு ஒருநாள் முழுவதும் இரவில் சிறைவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ஆபாசமாக வீடியோக்கள் அனுப்பிய நபர்- பதிலடி கொடுத்த பிரபல நடிகை