யார் தருவார் அரியாசனம்?.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும் முதல்வர் என்ற அரியானசனத்துக்கு மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் இதுவரை மோதிக்கொண்ட வாதங்களை மையமாக வைத்து ஒரு நையாண்டி கலந்த உண்மை பதிவினை இப்போது பார்ப்போம்.

இது முற்றிலும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. எனவே படித்தவுடன் மறந்துவிடவும்...

எடப்பாடி விவசாயி

பிரச்சாரத்துக்கு சென்ற மக்களிடம் பேசிய எடப்பாடி, "நான் ஒரு விவசாயி. ஒரு விவசாயியின் கஷ்டம் இன்னொரு விவசாயிக்குத்தான் தெரியும். எனவே விவசாயிகளோட அருமை தெரிந்த எனக்கு ஓட்டுப்போடுங்க என்று பேசினார்..

மண்புழு எடப்பாடி

அதற்கு பதிலடியாக பேசிய ஸ்டாலின், "எடப்பாடி ஒரு விவசாயி அல்ல, மண்புழு போல் ஊர்ந்து சசிகலாவின் கால்களில் சென்று முதல்வர் பதவி பெற்றவர். அவரால் விவசாயிகளுக்கு எந்ந நன்மையும் கிடைக்கவில்லை. இந்த எட்டுவருஷத்துல என்ன செஞ்சாங்க, எனவே அவருக்கு ஓட்டு போடாதீங்க" என்கிறார்.

விவசாயிகளுக்கான மண்புழு

அதற்கு பதில் அளித்த எடப்பாடி, ஸ்டாலின் என்னை மண் புழு என சொல்றாரு. ஆம் நான் மண்புழு தான். விவசாயிகளுக்காக மண்ணில் ஊடுருவி உரமாக பயன்படும் என்றார்.

ஸ்டாலின் கடும் தாக்கு

அதற்கு ஸ்டாலின், "எடப்பாடியை நான் மண்புழு என்று சொன்னவுடன் விவசாயிகளுக்கு உதவும் மண்புழு என்கிறார். ஆனால் அவர் விவசாயி அல்ல, அவர் ஒரு விஷவாயு என பதில் அளித்தார்.

முதல்வர் பழனிச்சாமி

இந்த பேச்சுக்கு பதிலடியாக பேசிய எடப்பாடி, ஒரு முதல்வர் என்றும் பாராமல் படு மோசமாக பேசுகிறார் ஸ்டாலின்,. நான் பதிலுக்கு பேசினால் அவர் காது சவ்வு கிழிந்துவிடும். சத்தியமாக சொல்றேன்... மானம் போனா திரும்பி வராது பார்த்துக்கங்க... என பேட்ட காளியாக மாறி எடப்பாடி கொந்தளிக்கிறார்.

அடிச்சுதூக்கலாமா?

உடன்பிறப்புகளே அடிச்சு தூக்கலாமா? என்ற கேட்கிறார் ஸ்டாலின். உங்க கதையில் நீங்க ஹீரோவாக இருக்கலாம் எடப்பாடி, என் கதையில் நான் வில்லன் என்கிறார். அப்போது ஸ்டாலினுடன் இருக்கும் உடன்பிறப்புகள்... சிந்துன வியர்வை துளிகளுக்கு ஓட்டு வராமலா போய்விடும் என்கிறார். அப்போது ஸ்டாலின், "கொலை வெறியோட உங்கள திட்டுனது உங்ககூட கூட்டணி வச்சிருக்கவங்க தான். இந்த தேர்தலோடு உங்க ஆட்டம் குளோஸ், மக்கள பார்க்கத்தான போறீங்க.. என்கிறார்

தரமான சம்பவங்கள்

இதற்கு பதிலடியாக முதல்வர் பழனிசாமி, "இந்த காளியோட ஆட்டத்த இனிமேதான் பார்க்க போறீங்க ஸ்டாலின், சிறப்பான தரமான சம்பவங்கள் இனிமே தான் இருக்கு. எலெக்சன் முடிச்ச பிறகு பாருங்க யாரு ஓடுறாங்கன்னு தெரியும்" என்கிறார்.

கதை முடியப்போகுது

அதற்கு ஸ்டாலின் "எடப்பாடி அவர்களே, உங்க அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வளைக்கலாம். மக்களை வாங்க முடியாது. இந்த தேர்தல் முடிந்த உடன் உங்களுக்கு சப்போர்ட் செய்யும் மோடியோடு சேர்ந்து உங்க கதையும் காலியாகும். உங்க ஆட்சி இல்லாம போயிடும்" என்கிறார்.

எடப்பாடியார் கோபம்

இங்கு குடும்ப செண்டிமென்ட்டோட, அரசியலுக்கு வந்தா.. அப்படியே ஓடிப்போயிடுங்க... கொலை காண்டுல இருக்கேன் என்ற ரீதியில் முழுமையாக காளியாக எடப்பாடி உருமாறுகிறார்.