டாஸ்மாக் போராட்டத்தின்போது பெண்ணை தாக்கிய எஸ்பி.. பாலியல் வழக்கை விசாரிப்பதற்கு எதிர்ப்பு

கோவை: டாஸ்மாக் போராட்டத்தின் போது பெண்ணின் கன்னத்தில் அறைந்த எஸ்பியை, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு தொடர்பாக உரிய விசாரணைக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேஷனல் விமன்ஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது

ரயில் நிலையம் 
பதாகை

இரயில் நிலையம் அருகில் இருந்து பேரணியாக வந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதே போல் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கைகளில் கண்டன பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

 

திருப்பூர் 
ஓங்கி அறைந்த அதிகாரி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஷிபா பானு, தற்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் திருப்பூரில் நடந்த டாஸ்மாக் போராட்டத்தின் போது பெண் என்றும் பாராமல் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

 

சர்ச்சை 
இடமாற்றம்

இது போன்ற சர்ச்சையில் சிக்கியவர் என்பதால் பாலியல் துன்புறுத்தல் வழக்கு முறையாக விசாரிப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

 

சிபிஐ 
உண்மை குற்றவாளி

மேலும் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இருக்கும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். இதையடுத்து முற்றுகையிட முயற்சித்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.