நாட்டையே பதற வைத்த பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளி யார்?

கோவை: நாட்டையே பதற வைத்த பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளி யார் என்பதை கண்டறிய போலீஸார், கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவிகளையும் பிழைப்புக்காக சிறிய கடைகளில் பணிக்கு செல்லும் இளம்பெண்களையும் காதல் வலையில் சிக்க வைப்பர். பின்னர் அவர்களிடம் ஆசைவார்த்தை பேசி தனிமையான இடத்துக்கு அழைத்து சென்றுவிடுவர்.

கூட்டு பலாத்காரம் 
கும்பல்

அங்கு பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து விடுவர். பின்னர் அந்த பெண்களை மிரட்டி தேவைப்படும் போது அவர்களது காம இச்சையை போக்கிக் கொள்வர். பணக்கார பெண்களிடம் பணத்தை பறித்துக் கொள்வதும் இந்த கும்பலின் வாடிக்கையாக இருந்தது.

 

சிக்கிய பெண்கள் 
ஆந்திர மாநிலம்

இது போல் 200-க்கும் மேற்பட்ட பெண்களை இந்த நிலையில் இது போல் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் தைரியமாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸார் 3 பேரை கைது செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசர் என்பவரை ஆந்திர மாநிலத்திலிருந்து போலீஸார் கைது செய்தனர்.

 

4 பேரையும் 
வாரிசுகள்

இந்த நிலையில் 4 பேரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.இந்த கும்பல் மிகவும் கொடூரமாக நடந்து கொள்ளும் வீடியோ மற்றும் ஆடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசியல் வாரிசுகளுக்கு சம்பந்தமில்லை என கோவை எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

4 கயவர்கள் 
விசாரிக்க திட்டம்

இந்த நிலையில் அந்த 4 கயவர்களின் நீதிமன்றக் காவலும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளி யார் என விசாரிக்க 4 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.