இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும் டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்

சிவகாசி: "இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்" என்று டப்மாஷ் செய்த 4 இளைஞர்கள் என்ன ஆனார்கள் தெரியுமா?

நடிகர் கார்த்தி நடித்த படம் "சிறுத்தை". இதில் அவர் போலீசாக நடித்திருப்பார். போலீஸ் யூனிபார்ம் போட்டுக் கொண்டு கார்த்தி, வில்லன் வீட்டுக்குள் நுழைவது போல ஒரு சீன் வரும்.

அப்போது வீட்டு வாசப்படியில் கார்த்தி நின்று கொண்டு, "இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்" என்று ஒரு டயலாக் பேசுவார்.

4 இளைஞர்கள் 
பிரச்சனை ஆனது

இந்த காட்சியைதான் ஈஸ்வரன், தங்கேஸ்வரன், முருகேசன், குருமதன் என்ற 4 இளைஞர்கள் டிக்-டாக் ஆப்பில் டப்மாஷ் செய்தார்கள். இப்படி செய்ததுகூட தவறில்லை. இதனை போலீஸ் ஸ்டேஷன் முன்பு செய்ததுதான் பிரச்சனை ஆகிவிட்டது. இவர்கள் 4 பேருமே துலுக்கப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள்.

 

பசுபதி பாண்டியன் 
விளையாட்டு தனம்

பசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள். எதுக்காக ஸ்டேஷன் வந்தோமோ, அந்த வேலையை மட்டும் பார்ப்பதை விட்டுவிட்டு, விளையாட்டுதனமாக இந்த டப்மேஷை ஸ்டேஷன் வாசப்பட்டியில் நின்று கொண்டு செய்திருக்கிறார்கள்.

 

இணையம் 
வைரல் வீடியோ

இந்த வீடியோவை கொண்டு போய் இணையத்திலும் போட்டுவிட்டார்கள். அது கன்னாபின்னாவென வைரலாகி, அது சம்பந்தமான தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் 4 பேரையும் ரவுண்டு கட்டி விட்டார்கள். காவல்துறையையும், காவல் நிலையத்தையும் அவமதிக்கும் வகையில் இது இருப்பதாக கருதப்பட்டது.

 

4 பிரிவுகள் 
4 பேர் கைது

மேலும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவமரியாதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 4 பேரும் இப்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டு உள்ளனர்.