500 ரூபாய் கொடுங்க.. என் மனைவி.. என்ன கொடுமை இது, இவரும் கணவரா?

வேலூர்: "500 ரூபாய் பணம் கொடுத்தால் என் மனைவி விபச்சாரத்திற்கு வருவாள்" இணையத்தில் மனைவியின் மொபைல் நம்பரை பரப்பிய விசித்திர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் கஸ்பா பயர் லைன் பகுதியை சேர்ந்தவர் குமார். பெயின்ட்டிங் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சசிகலா. கல்யாணம் ஆகி 13 வருஷமாகிறது. லவ் மேரேஜ்தான். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

குமாருக்கு ஃபுல் டைம் வொர்க் பெயின்ட்டிங்கைவிட தண்ணிதான். எப்பவுமே போதையிலதான் இருப்பார். இதில் ராத்திரி ஆகிவிட்டால் சசிகலாவுடன் சண்டை, தகராறு, அடிதடி நடக்கும். இதெல்லாம் போதாதென்று மனைவி மீது சந்தேகம் வேறு. இந்த சந்தேகம் காரணமாக மனைவியை நிறைய சித்ரவதை செய்துள்ளார் குமார்.

போலீசில் புகார் 
அறிவுரை

பொறுத்து பொறுத்து பார்த்த சசிகலா, இதை இப்படியே விட்டால் சரிவராது என்று நினைத்து 6 மாசத்துக்கு முன்னாடி வேலூர் மகளிர் போலீசுக்கு போய்விட்டார். தன்னை எப்படியெல்லாம் புருஷன் கொடுமைப்படுத்துகிறார் என்று சொல்லி புகார் ஒன்றையும் தந்தார். அந்த புகாரில் போலீசாரும், குமாரை வரவழைத்து, புத்தி சொல்லி ஒன்றாக சேர்ந்து வாழுமாறு அனுப்பி வைத்தனர்.

மாற்றமில்லை 
பாலியல் தொல்லை

திரும்பவும் பழைய குமார்தான். ஒன்னும் மாற்றமில்லை. தொடர் டாச்சரால் சசிகலா அரக்கோணத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். பிரிந்து போனாலும் சசிகலாவை விடவில்லை குமார். அதனால் தன் நண்பர்களிடம் சசிகலாவின் போன் நம்பரை கொடுத்து வாட்ஸப் குருப்பில் இணைத்து, பாலியல் தொல்லை கொடுக்க அவரே உதவி செய்துள்ளார்.

 

வாட்ஸ்அப் 
சசிகலா ஷாக்

இந்த விஷயம் தெரிந்த வாட்ஸ்அப்பில் உள்ளவர்கள் சசிகலாவுக்கு தினமும் போனில் பாலியல் டார்ச்சர் செய்துவந்துள்ளனர். இவ்வளவு வேலையையும் செய்வது கணவன்தான் என தெரிந்து சசிகலா ஷாக் ஆனார். அதனால் மனம் நொந்து போய், திரும்பவும் வேலூர் மகளிர் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு புகார் கொடுத்தார்.

 

விரக்தி 
தீவிர சிகிச்சை

அப்போது விரக்தியோடு இருந்த சசிகலா, கையோடு கொண்டு போன விஷத்தை ஸ்டேஷனிலேயே குடித்துவிட்டார். இதை பார்த்து பதறிப்போன போலீசார் உடனடியாக சசிகலாவை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்த இந்த சம்பவம் தொடர்பாக குமார் கைது செய்யப்பட்டார். இப்போது இந்த சைக்கோ புருஷன் வேலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.