பெண்கள் ஹாஸ்டலுக்குள் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? சம்பத்ராஜ் பின்னணி

சென்னை: சென்னையில் பெண்கள் விடுதிக்குள் பல்வேறு ரகசிய கேமராக்களை வைத்து படம் பிடித்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் கேமராக்களை மறைத்து வைத்திருந்தது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியிலிருந்து சென்னைக்கு ரியல் எஸ்டேட் அதிபர் ஆகும் கனவில் வந்தவர் தான் 48 வயதாகும் சம்பத்ராஜ். இவருக்கு மனைவியும், இரு பிள்ளைகளும், உள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழில் நஷ்டம் அடைந்து அதன் காரணமாக தனது வீட்டை ஹாஸ்டல் போல மாற்றி பெண்களுக்கு வாடகைக்கு விட முடிவு செய்தார்.

அட்வான்ஸ் 
வாடகை, அட்வான்ஸ்

ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டை ஹாஸ்டல் போல மாற்றிவிட்டார். மொத்தம் ஏழு பெண்கள் அங்கு வாடகைக்கு வந்தனர். அட்வான்ஸாக 20,000 ரூபாயும், மாத வாடகையாக 5,500 ரூபாயும், நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருந்து ஹாஸ்டல் இயங்கத் தொடங்கியது.

 

எல்லாம் ரெடி 
சதி திட்டம்

ஆனால், வாடகைக்கு பெண்கள் வருவதற்கு முன்பாகவே விடுதியில் குளியலறை, மின்சார பிளக்குகளின் ஓட்டைகள் (plug socket) ஹேங்கர் ஆகியவற்றில் ரகசிய கேமராக்களை பொருத்தி விட்டார் சம்பத்ராஜ். இன்ஜினியரிங் படித்துள்ள சம்பத்ராஜுக்கு இதைச் செய்ய வேறு யாருடைய உதவியும் தேவைப்படவில்லையாம்.

 

அம்பலமானது 
ஹேர்டிரையர்

இந்த நிலையில்தான், சமீபத்தில் அந்த ஹாஸ்டலுக்கு குடியேறிய ஒரு பெண்ணால் சம்பத்ராஜ் விவகாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பாத்ரூமிலுள்ள பிளக் சோக்கெட்டில், அவர் ஹேர்டிரையர் பிளக்கை சொருக முயற்சித்துள்ளார். ஆனால், பிளக் செய்ய முடியவில்லை. இதனால், சோக்கெட்டை கழற்றி சரி செய்ய முயன்றுள்ளார் அந்த பெண். அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.

 

குட்டி கேமரா 
சிக்கினார்

சோக்கெட்டை கழற்றியபோது உள்ளே குட்டி கேமரா இருந்தது அம்பலமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், பிற பெண்களிடமும் கூறியதால், ரூமிலுள்ள பிற இடங்களையும் சோதித்து பார்த்துள்ளனர். பல இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கேமராக்கள் அப்போது கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து காவல்துறைக்கு பெண்கள் தகவல் கொடுத்ததன் பேரில் சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டார்.