ஜெயலலிதா பெயர்... இலவச பொருட்களை கொளுத்துதல்! சிக்கும் சென்சார் போர்டு & சர்கார் டீம்...

சர்கார் சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, "அப்படத்தில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி மேல்மட்ட ஆலோசனைக்குப் பிறகு சர்கார் படத்தின் தயாரிப்பாளர், நடிகர், திரையரங்கு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பால் படக்குழு செய்வதறியாமல் திணறுகிறது.

 

 

சர்கார் படத்தில் அதிமுகவை முற்று முழுதாகத் தாக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவின் உண்மையான பெயரான கோமளவல்லி, ஜெயலலிதா ஆட்சியில் வழங்கிய இலவச பொருட்களை கொளுத்துதல் போன்றவை அதிமுகவினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் இலவசப் பொருட்களை எரிக்க்கும் காட்சியில் ஏ.ஆர்.முருகதாஸே நடித்துள்ளது காண்டின் உச்சம் என அம்மா விசுவாசிகள் முதல் அமைச்சர்கள் வரை மொத்தமாக சர்க்கார் மீது சரமாரி கடுப்பில் உள்ளார்கள்.

 

 

இந்நிலையில், சென்சார் போர்டு அதிகாரிகளைத் தாண்டி வந்திருக்கும் இப்படத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா? தற்போது "சென்சார் போர்டு இப்போது முழுக்க முழுக்க அரசியல் மயமாகிவிட்டது. அதிலும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் என்றால் சென்சார் போர்டு உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதும் நடக்கிறது. எனவே சென்சார் போர்டு சான்றிதழ் இறுதியானது அல்ல.

படத்தில் இருக்கும் தங்களுக்கு ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கச் சொல்லி அரசுத் தரப்பு படத் தயாரிப்பு நிறுவனத்தைக் கேட்கும். அந்த வகையில் சன் பிக்ச்சர்ஸ் தரப்பை அரசு கேட்க வேண்டும். அது நடக்குமானால் படம் தொடர்ந்து ஓடும். இல்லையென்றால் வழக்கு, தடை என்ற நிலையும் ஏற்படும்" என்று கூறினார்கள்.

 

 

அதேபோல சர்கார் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பழ. கருப்பையா, '' நான் 15 வயசுல டவுசர் போட்ட காலத்துலயே இந்திய எதிர்த்து போராடினவன்'என்றொரு வசனம் படத்தில் வரும். நானே பேசியிருக்கிறேன். இது கலைஞரைத் தாக்கி எழுதப்பட்டது. இதை சென்சார் போர்டு ம்யூட் பண்ணிவிட்டது. அதேபோல இப்படத்தில் பல ஸீன் கட் செய்யப்பட்டது. அதாவது, கலைஞருக்கு கட் போட்ட அதே சென்சார் போர்டு, ஜெயலலிதாவுக்கு பாரபட்சம் காட்டியது ஏன் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.