அகோரி மணிகண்டனின் நடு ராத்திரி பூஜைகள்.. 9 நாள் நடக்குமாம்.. நடுங்கிக் கிடக்கும் திருச்சி!

திருச்சி: இறந்துவிட்ட தாயின் சடலம் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பூஜை செய்த அகோரி மணிகண்டன் காளி கோயில் பூஜையில் மீண்டும் இறங்கியுள்ளார்.

திருச்சியை சேர்ந்த ராஜகோபாலும் மேரியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவர்கள். இவர்களின் மகன்தான் மணிகண்டன். இப்போது 38 வயதாகிறது. மணிகண்டன் சின்ன வயசிலேயே காசிக்கு போய் அகோரியாக மாறிவிட்டார்.

திருநீறு 
அகோரிகள்

அதனால் எப்பவுமே அவர் உடம்பு பூராவும் திருநீறுதான் பூசியிருப்பார். திடீர் திடீரென்று நடுராத்திரி உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டு பூஜை செய்வார். அப்படியே எழுந்து சுடுகாட்டுக்கு போய்விடுவார். அங்கே எரிந்து கொண்டிருக்கும் சடலத்தை பிட்டு சாப்பிடுவார். இவர் மட்டுமல்ல... பெரும்பாலான அகோரிகள் எல்லாருமே இப்படித்தான் செய்வார்கள்.

 

காளிகோயில் 
சடலத்தை சாப்பிடுவர்

திருச்சி உய்யகொண்டான் ஆற்றங்கரையில் ஜெய் அகோர காளி கோயில் ஒன்று உள்ளது. இதை மணிகண்டன்தான் கவனித்து வருகிறார். அமாவாசை, பவுர்ணமி நேரங்களில் மணிகண்டன் பூஜைகளை நிறைய நடத்துவார் மணிகண்டன். கடந்த வாரம் மணிகண்டன் அம்மா மேரி இறந்துவிட்டார். அப்போது சடலத்தின் மீது உட்கார்ந்து பூஜை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

நவராத்திரி 
காளிக்கு பூஜை

இந்நிலையில் தற்போது நவராத்திரி பூஜைகள் தொடங்கிவிட்டது. இதனால் வழக்கம்போல் மணிகண்டன் நடுராத்திரி பூஜையை நேற்று நடத்தினார். கூடவே 10 பேர் துணைக்கு இருந்தார்கள். அவர்களும் மணிகண்டனை போல அகோரிகள்தான். கங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த நீரை கொண்டு காளிக்கு சிறப்பு யாகம் செய்தார்கள்.

மந்திரங்கள் 
தலைகீழ் நின்று மந்திரம்

அப்போது திடீரென ஒருவர் தலைகீழாக நின்று கொண்டு மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். அவர் மந்திரங்களை முடித்தபிறகு இன்னொருவர் சங்கு எடுத்து சத்தமாக ஊத ஆரம்பித்துவிட்டார். அப்போது ராத்திரி 2 மணி. எல்லா பூஜைகளும் செய்து முடிக்க விடியற்காலையே ஆகிவிட்டது. இப்படியே 9 நாளுக்கு நவராத்திரி பூஜையை மணிகண்டன் நடத்த போகிறாராம்!!