ஃபுல் போதை.. இங்கிலிஷ் படம் பார்த்த சதீஷ்குமார்.. தியேட்டர் ஊழியர் விரலை கடித்து துப்பினார்

சேலம்: போதையில் கைவிரலை இழுத்து பிடித்து கடித்து விட்டதால் ஒருவருக்கு விரல் துண்டாகியே போய்விட்டது.

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 32 வயதான இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு சினிமா பார்ப்பது என்றால் கொள்ளை ஆசை.

 

நைட் ஷோ 
போதையில் சதீஷ்

அதனால் நேற்று முன்தினம் தனது நண்பர் கண்ணன் என்பவருடன் நைட் ஷோ சென்றிருக்கிறார். சேலம் புது பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள தியேட்டரில் ஒரு இங்கிலீஷ் படம் ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டருக்குள் நுழையும்போதே ஃபுல் போதையில் இருந்தார் சதீஷ்குமார். இங்கிலீஷ் படத்தை போதையிலேயே பார்த்து முடித்தார். படம் முடிந்து வெளியே வந்தார்கள்.

பூட்டப்பட்ட கேட் 
வாக்குவாதம்-தகராறு

அப்போது தியேட்டரின் முன்பக்க கேட்டு பூட்டப்பட்டிருந்தது. அங்கு வாட்ச்மேன் சேட்டு இருந்தார் 25 வயதான சேட்டு கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். கேட்டை திறந்துவிடுமாறு சதீஷ்குமார் சேட்டுவிடம் கேட்டார். இருவருமே போதையில் இருந்ததால் சேட்டு அவர்களுக்கு பதில் சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேட்டுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இது தகராறாக போய்விட்டது.

 

நறுக்கென கடித்தார்

இதில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், சேட்டுவின் கையை பலமாக இழுத்து அவரது வலது கையின் ஆள்காட்டி விரலை நறுக்கென கடித்தார். வலியால் அலறி துடித்தார் சேட்டு. ஆனாலும் போதை சதீஷ் விடவே இல்லை. சேட்டு கத்த கத்த விரலை இன்னும் அழுத்தமாக கடித்தார். இதில் விரல் துண்டாகியே விட்டது.

 

ரத்தம் கொட்டியது 
சதீஷ் கைது

ரத்தம் பொல பொலவென கொட்டியது. இதனால் சேட்டு மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதைக்கண்ட மற்ற தியேட்டர் ஊழியர்கள் ஓடிவந்து சேட்டுவை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். அங்கு துண்டாக உடைந்த விரலை டாக்டர்கள் பொருத்த முயற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு, உடனடியாக கைவிரலை கடித்து துப்பிய சதீஷ்குமாரை கைது செய்தனர்.