200 பணியாளர்களை அதிரடியாக வெளியேற்றிய காக்னிசென்ட் நிறுவனம்.. என்ன காரணம்?

சென்னை: 200 மூத்த பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை காக்னிசென்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது.

காக்னிசென்ட் நிறுவனம் சென்ற வருடம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கியது. 400 பணியாளர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து தூக்கியது.

இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேலும் 200 மூத்த பணியாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

புதிய 
ஏன் இப்படி?

புதிய தொழில்நுட்பங்களை பெரிய அளவில் கற்றுக்கொள்ளவில்லை என்று கூறி இவர்களை பணியில் இருந்து தூக்கி இருக்கிறது காக்னிசென்ட் நிறுவனம். மேலும் இவர்களின் பணித்திறன் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்றும் விளக்கம் அளித்து இருக்கிறது.

யார் 
யாரை நீக்குகிறது

இதன் காரணமாக மூத்த பணியாளர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இயக்குனர் பொறுப்பில் உள்ள பணியாளர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சீனியர் பொறுப்பில் உள்ள சில பணியாளர்களையும் பணியில் இருந்து நீக்கி உள்ளது.

 

என்ன 
என்ன கொடுக்கும்

இவர்களுக்கு பணியை விட்டு நீக்கியதன் காரணமாக இழப்பீடு தொகை கொடுக்கப்பட இருக்கிறது. 250 கோடி ரூபாய் பணம் இவர்களுக்கு இழப்பீடாக கொடுக்கப்பட உள்ளது. பணி இருந்த காலம், பொறுப்பை வைத்து இந்த இழப்பீடு கொடுக்கப்படும்.

 

புதிய பணியாளர்கள் 
புதிதாக சேர்வார்கள்

இதற்காக புதிய பணியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இளைஞர்களை பணியில் எடுக்க காக்னிசென்ட் நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.