எம்ஜிஆர்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. என்ன ஒரு தொடர்பு.. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புதுச்சிறப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.

இந்த நிலையில் இன்று அந்த பேருந்து நிலையத்தில் இருந்த சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus Terminus) என்ற பெயர் நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு 
என்ன சிறப்பு

சென்னை புறநகர் பேருந்து நிலையம், பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் என்று அறியப்படுகிறது. இது ஆசியாவின் பெரிய பேருந்து நிலையம் ஆகும். ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழ் பெற்றது இது. இது 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரே சமயத்தில் 270 பேருந்துகளை உள்ளே நிறுத்த முடியும். இது 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.

 

கருணாநிதி 
கருணாநிதி தொடங்கியது

இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டம் ஆகும். 1999ல் இந்த திட்டத்திற்கு கருணாநிதி இடம் ஒதுக்கினார். முதலில் ஜார்ஜ் டவுனில் கொண்டுவரப்படுவதாக இருந்து பின், கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. 38 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டது. இவரது ஆட்சியில்தான் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானம் தொடங்கியது.

 

ஜெயலலிதா 
ஜெயலலிதா அடிக்கல்

அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்தபேருந்துநிலையத்தை திறந்தனர். பணிகள் நிறைவு பெற்று சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus Terminus) என்ற பெயருடன் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

 

எம்ஜிஆர் 
எம்ஜிஆர் பெயர்

இந்த நிலையில்தான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா டாக்டா எம்.ஜி.ஆா. பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இந்த பெயரை சூட்டி இருக்கிறது. திமுக, அதிமுக என்று தமிழகத்தின் முதுபெரும் தலைவர்கள் இந்த பேருந்து நிலையத்துடன் எதோ ஒரு வகையில் நெருக்கமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.