அவாய்டு செய்யும் சக கைதிகள்.. கடும் மன உளைச்சலில் அபிராமி!

 

இரண்டு குழந்தைகளை கொன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமியை சக கைதிகள் அவாய்ட் செய்வதால் அவர் மனஉளைச்சலில் உள்ள சிறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

சென்னை: இரண்டு குழந்தைகளை கொன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமியை சக கைதிகள் அவாய்ட் செய்வதால் அவர் மனஉளைச்சலில் உள்ள சிறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

கள்ளக்காதலனுக்காக தனது 2 குழந்தைகளை கடந்த மாதம் கொலை செய்துவிட்டு கேரளாவுக்கு தப்பி சென்றார் குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி. ஆனால அவரது கள்ளக்காதலனை வைத்தே நாகர்கோவிலில் கைது செய்தனர் போலீசார்.

இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகிய இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் போலி

இந்நிலையில் அபிராமி குறித்து நாள் தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது. அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் அதனை சிறை நிர்வாகம் மறுத்தது. அந்த தகவல் போலி என கூறியது.

சுந்தரத்தின் உறவு

இந்நிலையில் தன்னை குடும்பத்தினர் யாரும் சந்திக்க வராததால் அபிராமி கடும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கள்ளக்காதலன் சுந்தரத்துக்காக அரவது மனைவி முத்துலெட்சுமி மருத்துவமனையில் காத்திருந்தார்.

புலம்பும் அபிராமி

ஆனால் அபிராமிக்காக யாருமே நீதிமன்றத்திற்கு வரவில்லை. தற்போது தான் செய்த தவறை நினைத்து சக கைதிகளிடம் புலம்பி வருகிறாராம் அபிராமி.

சக கைதிகள் வெறுப்பு

குழந்தைகளை கொன்று தான் மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டதாக கூறி கதறும் அபிராமிக்கு சக கைதிகள் சிலர் ஆறுதல் கூறினாலும் பெரும்பாலான கைதிகள் அவர் மீது வெறுப்பாகவே உள்ளனராம்.

பித்துபிடித்ததுப்போல்

அபிராமியிடம் முகம் கொடுத்துக்கூட பேசாமல், ஒதுக்குவதாக கூறப்படுகிறது. பெற்றோர், கணவர் என குடும்பத்தினர் ஒதுக்கிய நிலையில் தற்போது சக கைதிகளும் அவாய்ட் செய்வதால் பித்துபிடித்ததுப்போல் இருக்கிறாம் அபிராமி.