புதுத்தாலி.. பட்டுப்புடவை.. வேறு ஒரு இளைஞருடன் மனைவி.. அதிர்ந்த கணவன்!!

கணவனை ஏமாற்றி இளம்பெண் மறுமணம் செய்துகொண்டார்.

வேலூர்: இப்படியும் ஒரு பெண்ணா என்றுதான் வேலூர் மாவட்டம் முழுவதும் பேச்சாக உள்ளது.

ஜோலார்பேட்டையை அருகே பொன்னேரி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த சமிதா என்ற 18 வயது பெண்ணுக்கும், உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இரு தரப்பு சம்மதத்துடன், பெண், மாப்பிள்ளை சம்மதத்துடன்தான் இந்த கல்யாணம் திருத்தணி முருகன் கோயிலில் நடந்தது.

மனக்கசப்பு

கல்யாணம் அன்றைக்கு வழக்கம்போல், கல்யாண வீட்டார் இரு தரப்பினரிடையே குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக ஒரு பிரச்சனை வந்தது. இது பெரும்பாலும் எல்லா கல்யாணங்களிலும் நடக்கக்கூடிய ஒரு தகராறுதான். இந்த மனக்கசப்பு சில நாட்களாகவே இரு தரப்பிலும் நீடித்து வந்தது. பிறகு இந்த பிரச்சனை நாள் ஆக ஆக சரியாகிவிட்டது.

பார்க்கக்கூட இல்லை

இந்த சப்பை காரணத்தை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சமிதா கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். கோபம் தணிந்து சமிதா திரும்பி வருவார் என்று பார்த்தால் வரவே இல்லை. அதனால் கணவர் சக்திவேல் சமிதாவை கூப்பிட மாமியார் வீட்டுக்கு போனார். ஆனால், கணவனை நேரில் கூட வந்து சமிதா பார்க்கவில்லை. ரொம்ப கோபமாக இருப்பதாக சொல்லி, பார்க்கவும், பேசவும் இல்லை.

கிரிவலம் சென்றார்

மனைவி தன்னுடன் வாழ வரவில்லையே என்று சக்திவேல் மன சங்கடப்பட்டார். அதனால் சமிதா எப்படியாவது வந்து தன்னுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு கிரிவலம் சென்றார். கிரிவலம் சுற்றி வரும்போது சக்திவேல் பயங்கரமாக அதிர்ச்சி அடைந்தார். அங்கே சமிதா... வேறொரு இளைஞருடன்... கழுத்தில் புது மஞ்சள் தாலி... பட்டுப்புடவை.. என கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

இவர் என் கணவர்

சக்திவேலுக்கு நம்பவே முடியவில்லை... கொஞ்சலும், குலாவலும், சிணுங்கலுமாக இருவரும் நடந்து செல்வதை பார்த்த சக்திவேல் அவர்கள் பின்னாலேயே போனார். அருகில் சென்று அவர்களை வழிமறித்தார். ஆத்திரம் பொங்க கேள்விகளாய் சமிதாவை பார்த்து கேட்டார். அப்போது சமீதா, தன்னுடன் இருக்கும் இளைஞரை காட்டி, "இவர் பெயர் கார்த்திக், நாங்க ஸ்கூல்ல இருந்து லவ் பண்ணிட்டு வர்றோம். இப்போ கல்யாணமும் செய்துக்கிட்டோம்" என்றார்.

வண்டவாளங்கள் வெளிவந்தன

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல், "தனது மனைவி தன்னை விவாகரத்து செய்து கொள்ளாமலேயே வேறொரு இளைஞரை 2-வதாக கல்யாணம் செய்து கொண்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை துவக்கினார். அப்போது சமிதாவின் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.

தங்க வைக்கப்பட்டார்

சமிதா, 11-ம் வகுப்பு படிக்கும் போதே கார்த்திக்கை லப் பண்ணதுடன், அவரால் கர்ப்பமும் ஆகியுள்ளார். இந்த விஷயம் சமிதா வீட்டிற்கு தெரியவர, உடனடியாக சமிதாவின் கர்ப்பத்தையும் குடும்பத்தினர் கலைத்துள்ளனர். பிறகு சொந்தக்கார்களான சக்திவேல் வீட்டில் கொஞ்சநாள் சமிதாவை ஒரு பாதுகாப்புக்காக தங்க வைத்திருக்கிறார்கள்.

திருமணம் செய்ய முடிவு

ஆனால் சமிதா கர்ப்பமானது எதுவுமே சக்திவேலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியாது. அந்த வீட்டுக்கு போன சமிதா, சும்மா இருந்த சக்திவேலை லவ் பண்ண தொடங்கிவிட்டார். இதை பார்த்த இரு வீட்டு பெற்றோர்களும் இரண்டு பேருக்கும் கல்யாணத்தையும் செய்து வைத்துள்ளனர். இந்த விவரங்கள் அனைத்தும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தடம் மாறும் வாழ்க்கை

எப்படி பார்த்தாலும் முதல் கணவரை முறையாக டைவர்ஸ் பண்ணாமல் 2-வது கல்யாணம் செய்தது குற்றம் என்ற போலீசார் சமிதா மீது வழக்கு பதிந்து விசாரணையை மேலும் துவக்கி நடத்தி வருகின்றனர். படிக்கிற வயசில் பாதை தவறிவிட்டால்... கடைசிவரை அது ஊர் போய் நல்லபடியா சேராது என்பதற்கு உதாரணம்தான் இந்த சமிதா!!