மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்..குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி

சந்திக்க சென்ற உறவினர் ஒருவரிடம் தனது குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும் என கூறி கதறி அழுதுள்ளார் குன்றத்தூர் அபிராமி.

சென்னை: சந்திக்க சென்ற உறவினர் ஒருவரிடம் தனது குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும் என கூறி கதறி அழுதுள்ளார் குன்றத்தூர் அபிராமி.

கள்ளக்காதலனுக்காக தனது இரண்டு குழந்தைகளை துள்ள துடிக்க கொன்றுவிட்டு தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் குன்றத்தூர் அபிராமி.

அபிராமி சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அவரது கணவர் விஜயகுமாரோ அல்லது அபிராமியின் பெற்றோரோ சென்று சந்திக்கவில்லை.

தந்தை திட்டவட்டம்

அபிராமி மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டார், அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும், அவருக்காக ஜாமீன் கோரப்போவதில்லை என அபிராமியின் தந்தை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

மனஉளைச்சல்

குழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு, உறவுகள் ஒதுக்கியதால் ஏற்பட்ட இறுக்கம் என கடும் மன உளைச்சலில் உள்ளார் அபிராமி. இதன்காரணமாக சிறையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது.

சிறைத்துறை மறுப்பு

ஆனால் அபிராமி தற்கொலை முயற்சிக்கவில்லை சிறைத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக வெளியாள தகவல் பொய் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உறவுக்காரர் சந்திப்பு

இந்நிலையில் முதல் முறையாக அபிராமியின் உறவுக்காரர் ஒருவர் மனு மூலம் அவரை சிறையில் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கண்ணீர்விட்டு கதறியுள்ளார் அபிராமி.

மன்னிப்பே கிடையாது

என் குழந்தைகளின் நினைவு என்னை வாட்டுகிறது. நான் செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது. மன்னிக்க முடியாத தவறு செய்து விட்டேன்.

போட்டோக்களை கொண்டு வாருங்கள்

என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும். அடுத்த முறை வரும்போது என் குழந்தைகளின் போட்டோக்களை கொண்டு வாருங்கள் என அந்த உறவினரிடம் கூறி கதறியுள்ளார் அபிராமி.