நக்கீரன் கோபால் கைதானதே எனக்கு தெரியாது.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

சென்னை: நக்கீரன் கோபால் கைது பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

இன்று காலை நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைது பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

அதில், நக்கீரன் கோபால் கைதானது எனக்கு தெரியாது. பாஜகவை பற்றி பேசாமல் தமிழகத்தில் அரசியலே இல்லை. சரியாகவோ, தவறாகவோ எங்களை பற்றி பேசித்தான் ஆகவேண்டும்.

பத்திரிக்கை சுதந்திரம் பற்றி திமுக பேச கூடாது. திமுக பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக எடுக்காத நடவடிக்கையா. ஆளுநரை இதில் தொடர்புபடுத்தி பேசுவதே பெரிய சதி.

அரசு அதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். நிர்மலா தேவி விவகாரம் வெளியே வந்தால் பலர் உள்ளே போவார்கள். பல அரசியல்வாதிகள் இதில் சிக்குவார்கள் என்றுள்ளார்.