தயவு செய்து இந்த நெய்யை உபயோகித்து விடாதீர்கள்: கோவையில் பறிபோன 2 உயிர்கள்

கோவை, மேட்டுப்பாளையத்தில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நாடார் காலனி பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா செவ்வாயன்று நடைபெற்றது.

இவ்விழாவின் போது கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கபட்டுள்ளது. இதனை வாங்கி உண்ட பக்தர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு, மயக்கம் உள்ளிட்ட திடீர் உடல்நல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் இவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில், பிரசாத பாதிப்பால் லோகநாயகி (62), சாவித்திரி(60) ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விசாரணையில், பிரசாதத்தில் அசல் நெய்க்கு பதிலாக, தீபம் ஏற்றும் நெய் பயன்படுத்தியதுதான், இந்த விபத்துக்குக் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ