மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்து தமிழகத்தை திண்டாட வைத்து விட்டார் கருணாநிதி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.முக சார்பில் ஈரோட்டில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது உண்ணாவிரதத்தை முடிக்கும் தருவாயில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன்,

அன்றைக்குக் காவிரி ஒப்பந்தத்தை ஆட்சியில் இருந்த தி.மு.க புதிப்பித்திருந்தால் இன்றைக்கு இந்தப் பிரச்னையே வந்திருக்காது.

 

கருப்பண்ணன் செய்திபுனல் க்கான பட முடிவு

 

அன்றைய சூழலில் கருணாநிதி மானாட மயிலாட நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து, அதில் மூழ்கியிருந்ததால்தான் இன்றைக்கு நாம் சிரமப்படுகிறோம்.

அம்மா அரசைக் கலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தி.மு.கவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் ராசி இல்லை. அவரால் முதலமைச்சர் ஆக முடியாது. இதுக்கு இடையில் அவரோட மகன் உதயநிதி வேற அரசியலுக்கு வருகிறாராம்.

அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் இந்த ஆட்சியை அசைக்க முடியாது. இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க தான் ஆட்சியில் இருக்கும்" என சுருக்கென்று பேசியுள்ளார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ