40 ரூவாயா செல்லாது செல்லாது நீ என்ன பாகிஸ்தான்லயா இருக்க நூறு ரூவா கொடுத்துட்டு வண்டிய எடு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்டாக்சி ஓட்டுநர் மணிகண்டனை காவல்துறையினர் அவதூறாக பேசி தாக்கியதால் அவமானமடைந்த அவர் தீக்குளித்தார், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், இன்னும் சிலர் அராஜக போக்கை கடைபிடித்து கொண்டே தான் இருக்கின்றனர்.

புதிய காவல் விதிகளின் படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாயிண்டில் நின்று பணி முடியும் நேரம் வரை நியமிக்கப்பட்ட இடத்தில் நின்று அலுவல புரிய வேண்டும்.

நியமிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் உதவி ஆய்வாளர் அனுமதி பெற்று வேறு ஒருவரை அந்த இடத்தில் நிற்கவைத்துவிட்டு செல்ல வேண்டும்.

பாயிண்டில் நிற்பவரை தவிர வேறு இடத்தில் உள்ளவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து நின்று அலுவல் புரிய கூடாது. சுத்தமான சீருடையில் வரவேண்டும்.

பாயிண்ட் அலுவலின் போது செல்போனில் குறுந்தகவல்களை அனுப்பிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்ககூடாது.

அத்தியாவசிய அழைப்பாக இருந்தால் மட்டும் சிறிது நேரத்தில் பேசிவிட்டு பணியாற்ற வேண்டும். நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க கூடாது.

காவலர்கள் சாதாரண உடையிலோ, சீருடையிலோ இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். இதை மீறிச்சென்றால் உயர் அதிகாரிகள் தணிக்கையின் போது கடும் நடவடிக்கை இருக்கும்

காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை தணிக்கை செய்யக்கூடாது.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது பிடயரி(B,diary) வழக்குகள் பதிவு செய்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் விதி மீறும் வாகனங்களை துரத்தி பிடிக்க கூடாது" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் எந்த விதிமுறையை கடைபிடித்து போக்குவரத்து காவலர்  சோதனை என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ