எங்க அப்பா யாரு தெரியுமா மது போதையில் கார் ஓட்டி வந்த அதிகாரி மகளிடம் சிக்கி திணறிய போலீசார்

சென்னை: வாகன தணிக்கை செய்வதற்காக போலீசார் காரை நிறுத்தியபோது, அதை ஐபிஎஸ் அதிகாரி மகள் தட்டிக்கேட்டு சண்டை போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

சென்னை மெரினா பீச்சில் சனிக்கிழமை போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெண் வந்த காரையும் போலீசார் வழி மறித்து சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த காரில் வந்த பெண் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே காரை சோதனையிட போலீஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார். ஆனால், அந்த பெண்ணோ, காரை சோதனையிட கூடாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள கடலோர பாதுகாப்பு படையில் பணியாற்றும் ஏடிஜிபி ஒருவரின் மகள் என தன்னை பற்றி அவர் கூறி கான்ஸ்டபிள்களை மிரட்டியுள்ளார்.

தங்களை கடமையை செய்யவிடுமாறு அந்த போலீஸ்காரர்கள் பெண்ணிடம் கூறுகிறார்கள். அப்போது ஒரு கான்ஸ்டபிள் நடந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்துக்கொண்டார். இதை பார்த்த அந்த பெண், எதற்காக வீடியோ எடுக்குறீர்கள் என கேட்டு தகராறு செய்கிறார்.

தனது தந்தையிடம் சொன்னால் அடுத்த நொடியே, உங்கள் வேலை பறிபோய்விடும் எனவும் மிரட்டுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ள நிலையில், காரில் இருந்த அந்த பெண்ணும் அவர் தோழிகளும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று, சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

சென்னை தி.நகர் பகுதியில், ஹெல்மெட் அணியாத சாமானிய இளைஞரை போலீசார் பிடித்து அடித்த காட்சிகள் ஒரு பைக்கம் வைரலாகிறது என்றால் மற்றொரு பக்கம் நியாயமாக நடந்து கொண்ட போலீசாருக்கு எதிராக காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி மகளே மிரட்டல் விடுத்த சம்பவமும் இதே சென்னையில்தான் நடந்துள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ