சக்தி வாய்ந்த மனிதர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ முந்திய ஸ்டாலின் படு மோசமான நிலையில் ரஜினி

சென்னை: இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் 100 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் நடிகர் ரஜினிகாந்தை முந்தியுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், நிர்மலா சீதாராமன், சுப்ரமணியசுவாமி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பல தமிழர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நம்பர் 1 இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக தலைவர் அமித்ஷா 2வது இடமும், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3வது இடமும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவாத் 4வது இடமும், சோனியா காந்தி 5வது இடமும் பிடித்துள்ளனர்.

செயல்தலைவர் ஸ்டாலின் 
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்

திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்த பட்டியலில் 24வது இடத்தை பிடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய கூட்டணியா, பழைய கூட்டணியோடு தேர்தலை சந்திப்பதா என யோசித்து வருகிறார் ஸ்டாலின். இந்த பட்டியலில் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஐ முந்தியது ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியே.

 

எடப்பாடி பழனிச்சாமி 
ஈபிஎஸ் - ஓபிஎஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பட்டியலில் 64வது இடத்தை பிடித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 65வது இடம் பிடித்துள்ளார். நித்திய கண்டம் பூரண ஆயுஸ் என அதிமுக அரசு தமிழ் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க அம்மா பெயரை சொல்லி ஆளுக்கு ஒரு பூஜையை செய்து வருகின்றனர்.

 

ப.சிதம்பரம் 
67வது இடத்தில் சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், இந்த பட்டியலில் 67 இடத்தில் உள்ளார். ரெய்டு மேல் ரெய்டு, மகன் கார்த்தி மீதான ஊழல் குற்றச்சாட்டு என அடுத்தடுத்து புகாரை சந்தித்து வருகிறார்.

 

அமிதாப் - ரஜினி 
ரஜினி 78

இந்த பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 77வது இடத்திலும், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 78வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட், கோலிவுட் சூப்பர் ஸ்டார்களை முந்தியுள்ளனர் ஈபிஎஸ், ஓபிஎஸ் என்பதுதான் ஹாட் டாபிக். ஹர்திக் படேல் 99வது இடத்திலும், கர்நாடக இசைப்பாடகர் டி எம் கிருஷ்ணா 100வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ