குரங்கணியில் காட்டிற்கு தீ வைத்தது யார் தெரியுமா அதிர்ச்சியூட்டும் பதில்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 36 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இவர்களில் 13 பேர் திருப்பூரில் இருந்தும் 27 பேர் சென்னையில் இருந்தும் சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த தீ விபத்தில் இது வரை 11 பேர் இன்று வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெரும் பலரும் இன்னும் அபாய கட்டத்திலேயே உள்ளனர். 

இந்நிலையில், உரிய அனுமதி வாங்காமல் டிரெக்கிங் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனிடையே டிரெக்கிங் ஏற்பாடு செய்த பீட்டர் என்பவர் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வரும் வேளையில் இன்று முகநூலில் பீட்டர் ஒரு பதிவு போட்டு அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளார். 

அதாவது, குரங்கணியில் உரிய அனுமதி பெற்றுதான் டிரெக்கிங் சென்றோம் எனவும் அப்பகுதியில் விவசாயிகள் தான் தீ வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். வழிகாட்டிய அருண், மற்றும் விபின் டிரெக்கிங் பயிற்சியில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் எனவும் மேலே சென்று கீழே இறங்கும் போதுதான் விவசாயிகள் தீ வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே எரிந்து வந்ததாக அந்த பகுதி மக்களும், அதனையும் தாண்டி தினகரன் MLA  குறிப்பிட்ட பொது 15  நாடுகளாக எரிவதாகவும் பார்த்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அரசும், வனத்துறையும், ட்ரெக்கிங் நிறுவனரும் தங்கள் மீதுள்ள தவறை மறைக்க விவசாயிகள் மீது பழி சுமத்துவதாகவே தெரிவதாக மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.