சொல்லாமல் ட்ரெக்கிங் சென்ற சுபா திரும்பாமலே போயிவிட்டார் கதறியழுத குடும்பத்தினர்

திட்டக்குடி சுபா

தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற பெண் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. சுபாவின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடியாகும்.

சுபா உயிரிழப்பு

இவரது தந்தை பெயர் செல்வராஜ். சுபாவுக்கு கமல்ராஜ் என்ற சகோதரரும் உள்ளார். சுபா உயிரிழந்தது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு இன்று காலையில்தான் தெரிய வந்தது.

ஊரே திரண்டு கதறியது

இதனைக் கேட்டதும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர். இன்று மாலை சுபா உடல் திட்டக்குடி வந்தது. அப்போது ஊரே திரண்டு நின்று கதறி அழுதனர்.

தவித்த சகோதரர்

சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜை கேட்டபோது எதுவும் பேச முடியாமல் தவித்தார். பின்னர் அழுதபடியே அவர் கூறும்போது, எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் என்பதே தெரியவில்லை என்று கதறினார்.

தோழிகளுடன் ட்ரெக்கிங்

தொடர்ந்து பேச முடியாமல் அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தியது. மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சுபா தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.