அதிர்ச்சியை ஏற்படுத்திய விவகாரத்தில் திருப்பம் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வலர் காமராஜால் எட்டி உதைக்கப்பட்டு மரணமடைந்த உஷா கர்ப்பிணி இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தம்பதி சென்ற இருசக்கர வாகனத்தைக் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்பிணி பெண்ணின் இந்த மரணம் திருச்சி மட்டுமின்றி தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த சரவணன் என்கிற மருத்துவர் அதன் அறிக்கையை காவல் துறையினரிடம் அளித்துள்ளார்.

அதில், உஷா கர்ப்பிணி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என திருச்சியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி கூறியுள்ளார். இந்த விவகாரம் உஷா வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவி, ஒரு சில நிமிடங்களில் அங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து, கர்ப்பிணி பெண் பலியாகக் காரணமாக இருந்த காவல் ஆய்வாளர் காமராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக திருச்சி- தஞ்சை சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் நள்ளிரவில் தடியடியுடன் கூட்டம் கலைக்கப்பட்டது.

இந்த நிலையில், உஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த சரவணன் என்கிற மருத்துவர் அதன் அறிக்கையை காவல் துறையினரிடம் அளித்துள்ளார். அதில், உஷா கர்ப்பிணி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என திருச்சியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி கூறியுள்ளார். இந்த விவகாரம் உஷா வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.