ஏன் இந்த நிலை கொள்ளை லாபத்திற்காக விவசாய நிலத்தின் மீது குத்தப்பட்ட தவறான முத்திரை

மேற்கத்திய நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள். நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று அமைதி காத்ததன் விளைவு இன்று..?

1960களில் மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் மீத்தேன் மற்றும் இதர வாயுக்களின் சோதனை சோமாலியாவின் ஒட்டு மொத்த விவசாயத்தையே அழித்து விட்டது.

இரண்டாவதாக அந்நாட்டை விளையாத பூமி என்று அதே அமெரிக்கர்களால் முத்திரை குத்தப்பட்டு, அந்த நாட்டை உலக குப்பை தொட்டியாக்கி அனுக்கழிவு, மருத்துவக்கழிவுகளை கொட்டி கடல்வளத்தையும் அழித்தார்கள்.

இன்றைய கார்ப்ரேட் அமெரிக்க, இஸ்ரேலின் அடுத்த சோமாலிய பார்வை நம்நாடு. கார்ப்ரேட்களுக்கு நம் நாட்டில்  ஓதுக்கி குடுத்த நிலம் தமிழ்நாடு. 

 தமிழக மக்களாகிய நாம் விரைவில் சோமாலியாக மாற தயாராகி கொள்ள வேண்டும்...ஏனெனில் நல திட்டம் என்ற பெயரில் சாகர்மாலா, கெயில், மீத்தேன் போன்ற திட்டங்கள்..

எரிகாற்று திட்டத்தை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை இந்த திட்டத்தை வரவேற்கிறார்கள் விவசாயிகள் பாதிக்காதவாறு விவசாய நிலங்களில் செல்லாமல் மாற்று பாதையில்  அதாவது தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை வழியாக கொண்டு  செல்லலாம்

ஆற்றுப்படுகையோரமாக கொண்டு செல்லலாம்.அதை விட்டுவிட்டு 1 ஏக்கர் 2ஏக்கர் வைத்து விவசாயம் செய்யும் விவசாய நிலங்கள் குறுக்கே செல்லுவதால் தான் இந்த திட்டத்தை விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள் இது தான் உண்மை.

தமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து மீட்க போகிறோமா ?