விவசாய நிலத்தில் கவர்ச்சி நடிகை போஸ்டர்! எதுக்கு தெரியுமா

பறவைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக விவசாய நிலங்களில் கண் திருஷ்டி பொம்மை வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தனது வயலில் விளையும் விளைச்சல் மீது பிறர் கண் பட்டுவிடக் கூடாது என்பதற்காக கவர்ச்சி நடிகை உள்ள பேனரை வைத்துள்ளார் விவசாயி ஒருவர். இதனால், தனது பயிர்கள் மீது பிறர் கண் படுவதில்லை என்றும் அந்த விவசாயி கூறுகிறார்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், அன்கினாபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி செஞ்சு ரெட்டி. இவருக்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அதேபோல் அவரது நிலத்தில் விளைச்சலும் அமோகமாக இருந்து வந்தது. இந்த நிலங்களில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ஓக்ரா மற்றும் மிளகாய் ஆகியவை நல்ல விளைச்சளை அளித்துள்ளது.

 

 

இதனைப் பார்க்கும் அக்கம் பக்கத்து விவசாயிகள் பெருமூச்சு விடுவார்களாம். கல்லடி பட்டாலும் படலாம் கண்படக்கூடாது என்ற முதுமொழிக்கேற்ப, தனது வயலில் பயிரடப்படும் விளைச்சளைக் கண்டு அருகில் இருப்பவர்கள் பெருமூச்செறிவதை எப்படி தடுக்கலாம் என்று விவசாயி செஞ்சுரெட்டி யோசனை செய்து வந்துள்ளார். தனது வயலுக்கு வருபவர்கள், விளைச்சலைப் பார்த்து கண்படாமல் இருப்பதற்காக இவர் புதுமையாக செய்த காரியம்தான் ஹைலைட்டாக உள்ளது. அவரது தந்திரம், வெற்றி பெற்றுள்ளது. அங்கு வரும் மக்கள், அவரது வயலில் விளைந்தவைகளைப் பார்க்காமல் சென்று வருகிறார்களாம்.

 

 

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் உள்ள பேனரை வயலில் வைத்துள்ளாராம் செஞ்சு ரெட்டி. அந்த பேனரில் என்னைப் பார்த்து அழவாதே என்று தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. செஞ்சி ரெட்டி வயலுக்கு வருபவர்கள், விளைச்சல்களைப் பார்க்காமல், சன்னிலியோனின் பேனரைப் பார்த்து வருகிறார்களாம். பயிர் மீது யார் கண்ணும் படவில்லையாம். இப்படி ஒரு ஐடியாவை செயல்படுத்திய விவசாயி செஞ்சி ரெட்டியை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

 

இது குறித்து விவசாயி செஞ்சு ரெட்டி கூறும்போது, எனக்கு 10 ஏக்கர் நிலம் உண்டு. நிலத்தின் வழியாக செல்பவர்கள் கண்திருஷ்டி படுவதாக எனக்கு எண்ணம் எழுந்தது. அதனால்தான், இப்படியொரு பேனரை வைத்தேன். இப்போது என் பயிர்கள் மீது, மக்களின் பார்வை போவதில்லை என்கிறார்.