இனி நம்ம ஊரு ரயில் டிக்கெட் நம்ம தமிழ் மொழியில் சுழற்றி அடிக்கும் அடியில் அடிபணிந்த மத்திய அரசு

இனி வரும் காலங்களில் அந்தந்த மாநிலங்களில் மாநில மொழியிலேயே ரயில் டிக்கெட் வழங்கப்படும் என ரெயில்வே பயணிகள் வசதிக்குழு தலைவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

பாஜக தேசிய செயலாளர்  எச்.ராஜா ரெயில்வே பயணிகள் வசதிக்குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

எச்.ராஜா செய்திபுனல் க்கான பட முடிவு

நேற்று டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களை ஆய்வு செய்த எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ரயில்வே பயணிகள் வசதிக்குழு கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 8,500 ரெயில் நிலையங்கள் உள்ளன.

எச்.ராஜா செய்திபுனல் க்கான பட முடிவு

இதுவரையிலும் 2 ஆண்டுகளில் 366 ரெயில் நிலையங்களில் ஆய்வு நடத்தி உள்ளோம். ரெயில் நிலைய குறைகளை நாங்கள் கண்டுபிடித்து சொல்வதால் அது சரி செய்யப்படுகிறது.

இந்த ஆய்வுக்கு முன்னதாக ரெயில்வே துறை மந்திரியை சந்தித்து பேசினோம். அப்போது, தென் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே டிக்கெட் அச்சிடப்பட வேண்டும் என்றோம்.

உடனே அவர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதை அமல்படுத்த கேட்டுக்கொண்டார். 

அதிகாரிகள் குழு ரயில்வே டிக்கெட்டில் தமிழ்மொழியை இடம்பெறச்செய்யும் வகையில் அதன் சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தை மாற்றி வடிவமைக்க ஒப்புக்கொண்டனர். இது பாராட்டத்தக்க விஷயம் ஆகும்.என அவர் கூறினார்.

எச்.ராஜா செய்திபுனல் க்கான பட முடிவு