ஐடி பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு தண்டனை

சிவகங்கை தாலுகா பேரணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தாய் மற்றும் உறவினர்களுடன் வீட்டில் இரவில் படுத்திருந்தார். அப்போது அங்கு ஒரு காரில் 2 பேர் வந்தனர். அவர்கள் வீடு புகுந்து சிறுமியை எழுப்பினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி வெளியே அழைத்து சென்ற அவர்கள் சிறுமியை காரில் கடத்தி சென்று விட்டனர். சிறிது தூரம் சென்ற நிலையில் சிறுமியை கற்பழித்துவிட்டு வழியில் இறக்கி விட்டுவிட்டு மாயமாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை மொட்டையடித்து கொடுமைபடுத்திய கிராம்!

சத்தீஸ்கர் மாநிலம் காவர்தா மாவட்டத்தில் 13 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் யாதவ் குடிபோதையில் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை கிராமத்தில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் அர்ஜூனை தண்டிக்காமல் சிறுமிக்கு தண்டனை கொடுத்தனர். பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி மாசடைந்து விட்டாள். அவளை தூய்மைப்படுத்த மொட்டையடிக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து சிறுமிக்கு பாதி மொட்டையடித்தனர். மேலும் அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் அர்ஜூன் யாதவை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அர்ஜூன் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் பஞ்சாயத்தார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இச்சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தவருக்கு தண்டனை கொடுக்காமல் சிறுமிக்கு மொட்டையடிக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐடி பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை!

சென்னை பள்ளிக்கரணையில் ஐடி பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நகை, செல்போன் கொள்ளையடித்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.