அக்னியின் ஆட்டம் தொடங்கியதா தமிழகத்தில் கேஸ் டியூப் உருவியதில் எரிவாயு பரவி பயங்கர தீ

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோவில்களில் தீ விபத்து நிகழ்வது  தொடர்கதையாகி வருகிறது.

இது திட்டமிட்டு நடக்கிறதா இல்லை எதேற்சையாக  நடக்கிறதா என்பது குறித்த விசாரணை எல்லாம் தொடங்க வில்லை. ஆனால் துயர சம்பவங்கள் மட்டும்  நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

அரசின் சார்பில் எந்த வித முயற்சிகளும் இன்னும் எடுக்கப்படவில்லை. மதுரை, திருவண்ணாமலை, என்று தொடங்கி இப்போது கும்பகோணத்தில் நிற்கிறது தீ விபத்து சம்பவம்.

இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதி கும்பபேஸ்வரரர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடன கலைஞர்களுக்கான உணவுகளை தயார் செய்யும் வேலை அந்த கோவிலில் தான் நடந்து வருகிறது.

உணவு சமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது அங்கிருந்த கேஸ் டியூப் உருவியதில் எரிவாயு பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுவரை வந்த தகவலின் படி, சேதங்கள் ஏற்படவில்லை என்றும் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.