இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய நடிகை வீட்டு காவலாளி

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கும் அந்தரங்க வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய நடிகை ஸ்ரீதேவி வீட்டின் காவலாளி சென்னை போலிஸ் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின்  பங்களாவை பீகார் மாநிலத்தை சேர்ந்த காவலாளி ராகுல் குமார் தாந்தி என்பவர் கவனித்து வருகிறார். இவருடைய அத்தை மகள் சென்னையில் உறவினர்கள் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். ராகுல் குமார், அத்தைமக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் குமார் தனது காதலியை அழைத்து வந்து ஸ்ரீதேவிக்கு சொந்தமான பங்களாவில் உல்லாசமாக இருந்துள்ளார். உல்லாசமாக இருக்கும்போது அந்தரங்க விஷயத்தை தனது செல் போனில் படம்பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இருவரும் நெருக்கமாக இருப்பதுபோல வீடியோ மற்றும் புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளனர். இதுபோல் பல முறை இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்த விஷயம் ராகுல் குமாரின் அத்தைக்கு தெரியவந்தது. உடனே மகளை சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து சென்று விட்டார். மேலும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மகளை கேலி செய்வதாக ராகுல் குமார் மீது புகாரும் அளித்தார். அதன்படி தேனாம்பேட்டை போலீசார் ராகுல் குமாரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராகுல்குமார் தனது அத்தை மகளுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டியிருக்கிறார். இந்த வீடியோக்களை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெண்ணின் தாய், ராகுல் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராகுல் குமார் உன் மகளை எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க, அப்படி இந்த வீடியோக்கள் உங்களுக்கு வேண்டும் என்றால் எனக்கு பணம் தர வேண்டும் என மிரட்டியிருக்கிறார். பணம் கொடுக்க வில்லை என்றால் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இதனால் தனது மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் அந்தப்பெண்ணின் தாய் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் கமலாதேவி ராகுல் குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உல்லாசமாக இருக்கும் அந்தரங்க விஷயத்தை வீடியோ பிடித்திருக்கிறார். மேலும் வீடியோ மற்றும் புகைப்படம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அதை தொடார்ந்து ராகுல் குமார் மீது பெண்களுக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.