மீண்டும் பரபரப்பான போயஸ் கார்டன் சுடச் சுட தலைமைக்கு பறக்கும் தகவல்கள்

சென்னை போயஸ் தோட்ட பகுதியை பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் அருகருகேதான் வீடுகள். 

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை போயஸ் தோட்டம் எப்போதுமே ஜேஜே என்று இருந்தது. அதற்கு ரஜினி அங்கு இருப்பதும் ஒரு காரணம் தான். அப்போது அருகில் முதலமைச்சர் வீடு இருக்கிறது எனவே தொந்தரவு செய்யாதீர்கள் என்று ரசிகர்களை வெளிப்படையாகவே கேட்டுக் கொள்வார் நடிகர் ரஜினிகாந்த்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சில மாதங்களிலேயே பரபரப்புகள் அனைத்தும் அடங்கி விட்டன. ஆனால் தற்போது மீண்டும் அதே பரபரப்பு தொடங்கியுள்ளது. 

காரணம் என்னவென்றால் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் இறங்கியதோடு மட்டுமல்லாமல் மிக வேகமாக அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்கிறார். இதனால் எப்போதுமே ரஜினியின் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு கெடுபிடிகள் தொடங்கி விட்டன. 

இதனையே ஒரு சாக்காக வைத்து கொண்டு நடிகர் ரஜினியின் மூவ்களை நோட்டமிடுகிறதாம் தமிழக காவல்துறை. அவர்கள் நோட்டமிட்டு நோட்ஸ்கள் அனைத்தும் ஆட்சித் தலைமைக்கு உடனுக்குடன் சுடச் சுட பறக்கின்றதாம். 

இந்த தகவல்களை தெரியாதவரா ரஜினி...? இதனால் தான் முக்கிய சந்திப்புகள், ஆலோசனைகள் என்று அனைத்தையுமே தனது மண்டபத்திலேயே வைத்துக் கொள்கிறாராம்.