தாலியை கழட்டி கணவர் மூஞ்சில் வீசிவிட்டு முன்னாள் காதலனுடன் ஓடிப்போன இளம் பெண்

திருமணமாகி 7 வது நாளிலே, இளம்பெண் ஒருவர் கணவனை விட்டு தனது முன்னாள்  காதலனுடன் ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பலதா என்பவருக்கும் ஆனந்த்ஜோதி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 22ந் தேதி திருமணம் நடைபெற்றது. புஷ்பலதா திருமணத்திற்கு முன்பாக அதே ஊரைச்சேர்ந்த வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோரின் வர்ப்புறுத்தல் காரணமாக ஆனந்த் ஜோதியை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி, புஷ்பலதாவும் அவரது கணவர் ஆனந்த் ஜோதியும் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த புஷ்பலதாவின் முன்னாள் காதலன் தன்னுடன் வரும்படி புஷ்பலதாவிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆன்ந்த ஜோதி, புஷ்பலதாவின் முன்னாள் காதலனை இப்படியெல்லாம் பேசாதே என திட்டியிருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த புஷ்பலதா ஆனந்த் கட்டிய தாலியை கழட்டி அவர் மூஞ்சில் வீசிவிட்டு முன்னாள் காதலனுடன் ஓடிபோயுள்ளார். வீட்டிற்கு சென்ற ஆனந்த துக்கம் தாளாமல் விஷமருந்தி தற்கொலைக்கு முற்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்பொழுது அபாய நிலையை தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஆனந்த் ஜோதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஓடிப்போனவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.