இழுத்து மூடுங்க விடிய விடிய மக்கள் காட்டிய அதிரடி காலை விடிந்ததும் அரசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் உண்ணா விரத போராட்டம் நடத்தி வந்தனர்.

இரவோடு போராட்டம் முடிந்து விடும் என்று நினைக்கையில் மீத்தேன், ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டு வரும் தாமிர உருக்காலை விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது..

இதனை தொடர்ந்து அங்கே மக்கள் போராட்டம் வெடித்து தூத்துக்குடி-நெல்லை சாலையில் எம்.ஜி.ஆர். பூங்காவின் முன்பாக அமர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஏராளமான பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதை காண முடிகிறது.

அரசின் தரப்பில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட பொதுமக்கள் தரப்பு மறுத்துவிட்டனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைப் புகையால் காற்றுமாசு ஏற்படுகிறது என்றும்,  நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி இருகின்றனர்.

நெடுவாசல், கதிராமங்கலம் போன்று தூத்துக்குடியிலும் மக்கள் புரட்சி வெடித்து விட்டதால், இக்கட்டனான சூழ்நிலையில் சிக்கி தவிக்கிறது தமிழக அரசு.