18 மாறி 23 ஆனது எப்படி சராமாரியாக களமிறக்கப்படும் ஸ்லீப்பர் செல்கள் ஆட்சி கலைப்புக்கு தயார்

ஜெயலலிதா இறப்பில் இருந்து ஆட்சி இப்ப கலையுமோ அப்ப கலையுமோ என்று இழுத்தடித்தவாறே வந்து, இப்போது வரை பிழைப்பை ஒட்டி கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி.

சசிகலா என்ற கை ஓய்ந்தவுடன் கட்சியில் சில மாறுதல்கள் தென்பட்டாலும், மறுபுறம் தினகரனின் கை சசிகலாவை விட மேலோங்கி ஆகாயத்தில் நிற்கிறது.

அடிமேல் அடி விழுந்தாலும், இடிமேல் இடி விழுந்தாலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு பேரிடி கொடுக்காமல் ஓய மாட்டேன் என்று சபதம் பூண்டுள்ளார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் ஆட்சி கலையும் என்று திருக்குறுங்குடி ஆலயத்தில் வைத்து சொல்வது கடவுள் பெருமாள் சொல்வது போன்றது என்று கடந்த அக்டோபர் மாதம் சொன்ன தினகரன் அதை நினைவூட்டும் வகையில் அடுத்த கட்ட செயல்களை செய்து வருகிறார்.

பொங்கல் வாழ்த்து கூறியுள்ள டிடிவி தினகரனோ, பதரைப் போல ஒரு களையை போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்துள்ளவர்களை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் நெல்லை மாவட்டம் வந்த டிடிவி தினகரன், எடப்பாடி அணியினர் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.

இன்னும் கூடிய விரைவில் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லும் காலம் வரும். அந்த நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையும் என்று கூறி இருந்தார்.

தை பிறந்தால் வழி பிறக்கும். திருக்குறுங்குடி ஆலயத்தில் வைத்து சொல்வது கடவுள் பெருமாள் சொல்வது போன்றது என்று கூறியதோடு அதற்கேற்ப தனது அரசியல் நகர்வுகளை கணகட்சிதமாக மேற்கொண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் சசிகலாவும் கட்சி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை தினகரனே தீர்மானிக்கலாம் என்று தினகரனுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளாராம்.

திட்டமிட்டபடி தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க. தான் எங்கள் கட்சி. 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பிற்காக காத்திருக்கிறேன்.

இந்த தீர்ப்பு வந்த பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்துவோம்.

18 எம்.எல்.ஏக்கள் என்னுடன் இருக்கும் நிலையில் மேலும் 5 பேர் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியுள்ளனர். இது தவிர ஸ்லீப்பர் செல்களும் இருக்கின்றனர்.

இரண்டொரு மாதத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். அதே வேகத்தோடு பொங்கல் வாழ்த்திலும் ஆட்சி கலைப்பு பற்றி கூறியுள்ளார்.

இந்த வயசுல அவருக்கு அரசியல் தேவையில்லை சொல்வது ரஜினி ரசிகன் ஆர்ஜேபாலாஜி