இந்த வயசுல அவருக்கு அரசியல் தேவையில்லை சொல்வது ரஜினி ரசிகன் ஆர்ஜேபாலாஜி

சென்னை : ரஜினிக்கு வயது முதிர்வு ஏற்பட்டு விட்டதால் அவர் இனி அரசியலுக்கு வந்து இந்த தலைமுறைக்கு ஏற்ற திட்டங்களை கொடுப்பாரா என்பது சந்தேகமானது தான் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை குறித்து ஆர்.ஜே.பாலாஜி அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டி ஒன்று மிகவும் பரபரப்பாக உள்ளது. அதில் பேசும் பாலாஜி, பாபா படத்தில் ஒரு ரொமான்டிக் பாட்டில் தமிழ்நாடு தமிழ்நாடு என் உயிர்நாடு என்று ஒரு வரி வந்திருக்கும் அதை கேட்ட போதே ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று நினைத்தேன். ஏன் வந்துவிடுவார் என்றால், ரஜினி நல்ல மனுஷன் என்று சின்ன வயதில் இருந்தே என் மனதில் பதிந்து விட்டது. எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பலருக்குமே இந்த நினைப்பு இருக்கிறது.

ரஜினி மிகவும் நல்ல மனிதர் மக்களுக்கு நல்லதை செய்வார் என்று 12ம் வகுப்பு படிக்கும் போதே ஒரு ஆர்வம் வந்துவிட்டது. இப்போது என் மகனுக்கு 5 வயதாகிறது, சுமார் 20 வருடங்களாக அவர் அரசியலுக்கு வருவார் என்று ஏங்கியவன் நான்.

ரஜினி சந்தோஷமாக இருக்க வேண்டும் 
ரஜினியால் மாற்றம் செய்ய முடியுமா?

இன்று நான் என்ன நினைக்கிறேன் என்றால் ரஜினி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரால் இனி மாற்றம் செய்ய முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை, ஏனெனில் என்னுடைய மாமனாருக்கு 65 வயதாகிறது அவர் என்னுடைய குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

என்ன திட்டம் வைத்திருக்கிறார் 
காலம் கடந்துவிட்டது

அதைப் பார்த்து அவரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்,இந்த வயதில் இது தான் தேவை என்று நினைக்கிறேன். இதே போன்று தான் ரஜினி ரசிகனாக அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்குப் பிறகு அரசியலுக்கு வர வேண்டாம் என்றே நினைக்கிறேன்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் கஷ்டப்படுவார் என்பதைத் தாண்டி எங்களுக்கான திட்டங்கள் என்ன அவர் தருவார் , என்ன எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதற்கான காலம் முடிந்துவிட்டது.

லாரா பேட்டிங் 
லாராவின் காலமும் அப்படித் தான்

வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் வீரர் பிரெய்ன் லாராவை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடைய மேட்ச்சை ராப்பகலாக முழித்து பார்த்திருக்கிறேன். அண்மையில் அமெரிக்காவில் ஒரு மேட்ச் நடந்தது அதில் லாரா விளையாடினார் ஆனால் அதை பார்க்க வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை, ஏனெனில் லாரா சிறப்பாக விளையாடிய காலமெல்லாம் முடிந்துவிட்டது.

படம் நடித்தால் பார்க்கலாம் 
தலைவர் என்ற ஈர்ப்பு வராது?

என்னுடைய மாமனாரை நான் ஏன் ரஜினியோடு ஒப்பிட்டு சொல்கிறேன் என்றால், நான் 10 விஷயங்களைச் சொன்னால் அவரால் 2 விஷயங்களைத் தான் செய்ய முடியும். அதற்கான உடல் வலிமையோ, மனதளவிலும் முதிர்ச்சி ஏற்பட்டுள்ளதால் சாத்தியம் இல்லை. ரஜினி ஒரு ஐகான் அவர் இதன் பிறகு படம் நடித்தால் ரசிகராக பார்ப்பேன். ஆனால் அவர் ஒரு அரசியல் தலைவராக வந்தால் அவர் மீது ஒரு ஈர்ப்பு இப்போது வருமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான் என்று பாலாஜி கூறியுள்ளார். இது ரஜினி அரசியல் அறிவிப்புக்கு முன்பு பாலாஜி கொடுத்த பேட்டி என கூறப்படுகிறது. இப்போது வைரலாகிறது இந்த வீடியோ.

மகத்துவம் நிறைந்த தை மாத ராசி பலன்கள்