55 எம்.எல்.ஏக்கள் ரெடி பீதியை கிளப்பிய தினகரன் பிரித்து மேய்ந்த சசிகலா

55 எம்.எல்.ஏக்கள் ரெடி...பீதியை கிளப்பிய தினகரன்! பிரித்து மேய்ந்த சசிகலா! 

நேற்று திட்டமிட்டபடி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவைச் சந்தித்தார் டி.டி.வி.தினகரன்.அவருடன் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவரும் சென்றிருந்தனர். 

பின்,சிறையிலிருந்து திரும்பிய தினகரன், ‘சசிகலா மௌன விரதத்தைத் தொடர்கிறார்...நான் சொன்னதை பொறுமையாக கேட்ட சசிகலா, பேப்பரில் அதற்கு சரி.. இல்லை என்று எழுதிக் காட்டினார்’ என்று சொன்னார். உண்மையில் சிறைக்குள் என்ன நடந்தது என்பதை விசாரித்தோம்.

ஆர்.கே.நகர் வெற்றிக்கு சசிகலாவிடம் வாழ்த்து பெற சென்றபோது தினகரனிடம் அவர் முகம் கொடுத்து பேசவே இல்லை. சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன், சசிகலா மௌன விரதத்தில் இருப்பதாக சொன்னார். 

ஆனால்,உண்மையில் தினகரனிடம் பேச விருப்பம் இல்லாததால் தான் அவரிடம் பேசவில்லை,தினகரனுக்கு பின் தன்னை சிறையில் பார்க்க வந்த அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார் சசிகலா.விபத்தால் ஓய்வெடுத்து வரும் புகழேந்தியை பார்க்க சென்றபோது இதை அவரிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் தினகரன். 

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிய புகழேந்தி,சசிகலாவிடம் பேசி   இந்த முறை தினகரனை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தது அவர்தானாம். அவர் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் தினகரனை சந்திக்கவே சசிகலா ஒப்புக்கொண்டாராம்.இதனை அடுத்து நேற்று பெங்களூரு சென்ற தினகரன், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மூவரும்  பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார்களாம். அதன் பிறகுதான் சசிகலாவும் இளவரசியும் வந்திருக்கிறார்கள்.

வெற்றிக்கும்,தங்கத்திற்கும் மட்டும் இன்முகத்தோடு வணக்கம் சொன்ன   சசிகலா, தினகரன் பக்கம் திரும்பவே இல்லையாம். வெற்றி..‘நான் உள்ளே இருந்தால் எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிடாதீங்க. எனக்கு எல்லாமே தெரியும். அக்கா ஹாஸ்பிட்டல்ல இருந்த வீடியோவை நீங்க யாரு சொல்லி வெளியிட்டீங்கன்னு எனக்கு தெரியும். அந்த வீடியோவை வெளியிட எனக்கு தெரியாதா? நீங்க என்ன அவ்வளவு பெரிய தியாகியா?’ என கோபத்துடன் கேட்டிருக்கிறார்.

அதற்கு பம்பிய வெற்றி..,‘என்னை யாரும் அந்த வீடியோவை வெளியிட சொல்லி நிர்பந்திக்கலம்மா..நானாதான் வெளியிட்டேன். இதுக்கும் தினகரனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை...’ எனச் சொல்லி இருக்கிறார்.

இந்த காதுல பூசுத்தற பதிலை எல்லாம் மீடியாவுக்கு சொல்லுங்க.இல்ல  வெளியில யாராவது எதுவும் தெரியாத குழந்தைங்க இருக்கும் பாருங்க... அங்கே போய் சொல்லுங்க. உங்களுக்கெல்லாம் நான் பட்ட கஷ்டமும் வலியும் தெரியல. பதவிக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்னுதானே அக்கா வீடியோவை வெளியிட்டீங்க... என் மேல பழி வந்தால் அதை எப்படி சரி செய்யணும்னு எனக்கு தெரியும். வீடியோவை வெளியிடுங்கன்னு நான் உங்ககிட்ட கேட்டேனா?’ என எகிறியிருக்கிறார் சசிகலா.

இதற்கிடையே பவ்யமாய் குறுக்கிட்ட தங்கம் ‘இல்லம்மா...நிஜமாவே தினகரனுக்கு எதுவும் தெரியாது. நான் அவரு கூடவேதான் இருக்கேன். அப்படி எதாவது இருந்தால் என்கிட்ட சொல்லி இருப்பாரு. இது வெற்றி அண்ணனா எடுத்த முடிவுதான். வீடியோவுக்கும்,தினகரனுக்கு எந்த சம்பந்தமும் இல்லைங்கம்மா...என சொல்லி இருக்கிறார்.

நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து மூடி மறைச்சா எனக்கு உண்மை தெரியாமல் போய்டும்னு நினைச்சீங்களா? எனக்கு எல்லாம் தெரியும். நீங்க இவனுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க... நீங்க எல்லோரும் என்னவெல்லாம் செய்யுறீங்க. யாரு யாரு கூட பேசுறீங்க... என்ன திட்டம் போடுறீங்க... எல்லாமே எனக்கு தெரியும். 

விவேக் தம்பிகிட்ட எல்லாமே சொல்லி அனுப்பி இருக்கேன். அவன் சொல்றதை கேட்டு நடந்துக்கோங்க. அவன் சின்ன பையனா இருந்தாலும் எவ்வளவு புத்திசாலித்தனமா நடந்துக்குறான். ஆனால், நீங்க அவனை உங்க எதிரியாகப் பார்க்குறீங்க... நினைக்கவே அசிங்கமா இருக்கு...’என்று 
பொரிந்து தள்ளியிருக்கிறார் சசிகலா. 

அதுவரை, அமைதியாக இருந்த தினகரன், ‘அவரை நாங்க யாரும் மதிக்காமல் நடக்கலை. அவருதான் எங்களை மதிக்கிறது கிடையாது. ஜெயா டி.வியை அவரு நடத்தினால், ஏதோ அவருதான் சி.எம். மாதிரி பேசிட்டு இருக்காரு. இதுவரைக்கும் ஒரு நாள்கூட என் வீட்டுக்கு அவரு வந்தது கிடையாது. அப்படி என்ன அவருக்கு ஈகோ? டி.வியில் என்ன செய்யலாம்...யாரை பேச வைக்கலாம் எதுவும் கேட்பது இல்லை. தி.மு.க காரங்களை எல்லாம் சேனலுக்கு கூட்டிட்டு வந்து பேச வைக்கிறாரு. 

அம்மா இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்குமா? இப்ப சொன்னாகூட  என் பின்னால் வருவதற்கு 55 எம்.எல்.ஏக்கள் ரெடியா இருக்காங்க. நான்தான் எதுவும் வேண்டாம்னு அமைதியா இருக்கேன். நேரம் வரும்போது அவங்க எல்லோரையும் உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன். அப்போதாவது என்னோட வேலைகளை நீங்க புரிஞ்சுக்கோங்க. எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செய்ய முடியாது. ஒவ்வொன்றையும் நான் நிதானமா யோசிச்சுதான் செஞ்சுட்டு இருக்கேன். ‘ என்று சொன்னாராம்.

ஆனால், தினகரன் சொன்ன எதையும் கேட்டு சசிகலா சமாதானம் அடையவில்லையாம்.மாறாக வெற்றியிடம் மட்டும் சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். அதாவது, தினகரனை தவிர்த்துவிட்டு மற்றவர்களிடம் மட்டும் தெளிவாகப் பேசி அனுப்பி இருக்கிறார்.இதனால் பெருத்த மன வருத்தத்தில் உள்ளாராம் தினகரன். 

போக்கிரி குண்டு பையன் இப்போ என்ன ஆனார் தெரியுமா வெளியான தகவல்