வளர்மதிக்கு பெரியார் விருது ஜூலி படம் பேரு உத்தமி தமிழனுக்குத்தான் எத்தனை அதிர்ச்சிகள்

வளர்மதிக்கு பெரியார் விருது; ஜூலி படம் பேரு உத்தமி’ - தமிழனுக்குத்தான் எத்தனை அதிர்ச்சிகள். சோதிக்காதீங்கடா என நெட்டிசங்கள் வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்

வளர்மதிக்கு வாழும் பெரியார் விருது...

தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.

இந்த விருதுப் பட்டியலில் சிறப்பான அம்சம் என்னன்னா? முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ள பெரியார் விருது தான் அது. 2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“உத்தமி” ஜூலி  

 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்ற ஜூலியானாவை விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு வரவழித்து வச்சு செய்து அனுப்பினார்கள். ஜல்லிக்கட்டின் மூலம் புகழை பெற்ற இந்த ஜூலியானா பிக்பாஸில் செய்து பித்தலாட்டத்தை வெலிஉலகிர்க்கு காட்டியது விஜய் தொலைக்காட்சி பிறகு இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த ஜூலியானா பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் ஜூலி புதிய தமிழ்ப் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இப்படத்திற்கு 'உத்தமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜூலி சமூக சேவகராக நடிப்பதாக அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

இதுகூட பரவாயில்லை, ''கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்" மற்றொரு குண்டை போட்டுள்ளார் ஜூலி... இதில் என்ன கொடுமைன்னா? ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஜூலி முதல் நாளிலேயே என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என நடிகர் ஸ்ரீ யிடம் பேசி முகம் சுழிக்க வைத்தார். பிறகு அடுத்தடுத்து செய்த செயல்கள் பார்வையாளர்களை வெறுக்கவைக்கும் அளவிற்கு அறிந் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினர். 

இப்படி மக்களின் வெறுப்பை வாங்கி கட்டிக்கொண்ட ஜூலியானா மீண்டும் நடிப்பு புரட்சி என்ற பெயரில் மீண்டும் வருவதை நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

இப்படி பட்ட நேரத்தில் வளர்மதிக்கு பெரியார் விருது, ஜூலி படம் பேரு உத்தமி என எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள்? தமிழன் இன்னும் எத்தனை அதிர்சிகளை கொடுக்க காத்திருக்கிறீர்கள் என சமூகவலைதளங்களில் வலைதள வாசிகள் வச்சு செய்கின்றனர்.

இதோ நெட்டிசன்களின் கருத்துப் பதிவு...

தந்தை பெரியாரை அவமதிக்க வேண்டும் என்பது சங்கிகளின் கனவு திட்டம். அதை சங்கி அரசின் அடிமைகள் எப்படி நிறைவேற்றலாம் என யோசித்த போது எழுந்த யோசனை! வளர்மதிக்கு பெரியார் விருது!

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று #ஜெயலலிதா #பெங்களூரு_சிறையில்இருந்தபோது அவரை #விடுதலை செய்யக் கோரி #தீச்சட்டி ஏந்தி போராடியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் வளர்மதிக்கு #பெரியார்விருது வழங்கப்பட்டுள்ளதாக #தமிழகஅரசு விளக்கம்.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும்.  இவங்க நம்மளவிட செம்மையாக பெரியாரை கலாய்க்கரங்கப்பா...நாம ஒண்ணும் பண்ணவேண்டியது இல்ல போல... #பெரியார்மண்ணுடா  #பெரியார்விருது

 

 

ஓவியா சிம்பு திருமணம் குறித்து சிம்பு பேசும் உண்மை காணொளி

எந்த விருது யாருக்கு கொடுக்கனும் கூட தெரியாத குமுட்டை பழனிசாமி பெரியார் னு எழுத தெரியதவளுக்கு #பெரியார்விருது எதற்கு???