ரெயிலில் அடிபட்டு பாதத்தில் சதை கிழிந்து தொங்க தனக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாதென்று

தமிழகத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 மணி நேரம் உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை யாரும் மீட்காமல் விட்ட வேதனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள செவல்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேக் கண்ணன்(வயது 27).

இவர் கடந்த சில தினங்களுக்கு சென்னையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

முன்பதிவில்லா பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த விவேக் கண்ணன் ரெயில் வையம்பட்டி ரெயில் நிலையத்தை கடந்து செவலூர் என்ற ஊரின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் அவரின் முகம் மற்றும் கை,கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரெயில்வே தண்டவாளம் அருகே கிடந்தார்.

சத்தம் கேட்டு வந்த அந்த பகுதிக்கு அருகில் உள்ள வீட்டில் குடியிருப்பவரில் ஒருவர், நபரை மீட்காமல் செய்த காரியம் கொதிப்படைய செய்கிறது.

விபத்து நடந்த இடத்தில் இருந்துமீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்னது:

அவர் விபத்துக்குள்ளாகி கிடந்த தண்டவாளத்திற்கு அருகில் ஒரு வீடு இருந்திருக்கிறது.

கதறும் குரல்கேட்டு வந்த அந்த வீட்டை சேர்ந்த அந்த நபர் தனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்கு போராடி கால்களில் தசை கிழிந்து தொங்கி கொண்டு இருக்கும் அவரிடம் ஒரு குச்சியை கையில் கொடுத்து அந்த இடத்தை விட்டு வெளியேறே சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

அவரால் முடியாமலும் எதைவும் பண்ண முடியாமலும் கால்களில் பாதத்தில் தசை கிழிந்து தொங்கிய வேலையிலும் நடந்து சிறிது தூரம் சென்று முடியாமல் தண்டவாளத்திலேயே செத்தாலும் சரி என விழுந்து உயிருக்கு போராடி இருக்கிறார்.

2 மணி நேரம் கழித்து அவனை மீட்புகுழு வந்து மீட்டு இருக்கிறது. இவ்வளவு கேவலமான மக்களுக்காகவா பேசிகொண்டு இருக்கிறோம்.

கால்களில் பாதத்தில் சதை தொங்க தனக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என எழுந்திரிக்கவே முடியாதவனை துரத்தினால் அவனுடைய மனம் மரணவேதனையை விட எவ்வளவு வேதனையை அடைந்திருக்கும்.

இந்த சமூகத்தில் தான் வாழ்கிறோமா என்று நினைக்கும் போது அருவருப்பாக உள்ளது.

சசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா விக்னேஷ்சிவன்