காதில் கேட்க முடியாத வார்த்தைகள் ஒற்றை மேற்கோளை எடுத்து கொண்டு இப்படி பேசுவதா

கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் தொடர்பான கட்டுரை சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதில் ஆண்டாள் குறித்த தவறான கருத்துகளை தெரிவித்து இருப்பதாக வைரமுத்து மீது விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மன்னிப்பு கோரி உள்ளார்.

இருப்பினும் பா.ஜ.க தேசிய செயலாளரான எச்.ராஜா தொடர்ந்து வைரமுத்துவை விமர்சனம் செய்து வருகிறார்.

எழுத்துச் சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பானசம்பவம் என்னை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்தது.

தமிழை உலக உச்சிக்குக் கொண்டுபோன பெருமைக்குரிய தமிழன். மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும்,

கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படிப்பேசலாம்?

வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல; தமிழனத்தின் பெரும் அடையாளம் என்பதைவிமர்சிப்பவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும்.

எளிய, ஏழைக்குடும்பத்தில் பிறந்து தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தவரை எப்படிஉன்னால் பேச முடிகிறது..?

உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்பட போகிறது என்ற அச்சம் எனக்குவருகிறது.

கவனமாகப் பேசுங்கள் ராசாவே! சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடை தோறும், முழங்கி அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை எப்படி நரம்பில்லாமல் ஒருவன் பேசுவது?

எச்.ராசாவே, நீ பேசியது அநாகரிகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’என்ற தலைப்பில், ஆண்டாளை எளியமனிதனுக்கும் புரியும் விதத்தில்பேசிய கவிஞனின் பிறப்பைஇழிசொல்லால் இழிவுப்படுத்தி விட்டாய்.

எச்.ராசாவே திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ்என்பதை உணர்ந்துகொள்.கொண்டாட வேண்டிய ஒரு கவிஞனை அநாகரிகமாய் பேசும் ராசாவே,

இப்படி பேச உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

உன்னால் தமிழினத்துக்கு வைர முத்து போல இலக்கியம் படைக்க முடியுமா? சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா? 

என தனது ஆவேச கருத்துக்களை அறிக்கையாக கூறியுள்ளார் பாரதி ராசா..

2018 ஆண்டின் முதல் பலி வாட்ஸ்அப் அம்பலப்படுத்திய ஆய்வுகள் இனியும் இயக்கத்தை தொடர முடியுமா