படிக்கும் போதே படபடப்பு ஏற்படுகிறது நொறுக்கப்பட்ட பற்கள் கண்களில் கள்ளிப்பால் ஊற்றி தண்டனை

கட்டபொம்மனின் தந்தையாகிய ஜெகவீர கட்டபொம்முவிற்கு, இலங்கையில் இருந்த டச்சுக்காரர்களின் ஆதரவு இருந்தது.

அதனால், ஆங்கிலேயர்களுக்குத் திரை செலுத்தவில்லை. 1783-ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த ஆங்கிலேயர், தங்களது பீரங்கி படைகளைக் கொண்டு,கோட்டையைப் பிளந்து, கஜானாவைக் கைப்பற்றினர்.

 40,000 டச்சு வராகன்கள் கிடைத்தன. அதனை எடுத்துக் கொண்டு, 1500 வராகன்கள் கொடுப்பதாக இருந்தால், கோட்டையை ஒப்படைக்கிறோம்” என்று கூறிய ஆங்கிலேயர்களுக்குப் பணிந்து திரை செலுத்த ஒப்புக் கொண்டான்.

 வரி வாங்கும் உரிமை பாளையக்காரனுக்கும், நவாப்பிற்கும் மட்டுமே உண்டு என்று மக்கள் கருத்து கூறினர்.

இதற்கிடையே, ஜெகவீர கட்டபொம்முவின் மூத்த மகன் கருத்தையா என்ற வீர பாண்டிய  நான்காம் கட்டபொம்மு ஆட்சிக்கு வந்தான். அவன் பதவிக்கு வந்த போது, பாஞ்சாலங்குறிச்சியின் இடிந்த கோட்டை மட்டுமே  அவனுக்கு கிடைத்தது.

இதனைச் சேர்ந்த புன்னைக் காயல், மணப்பாடு கோட்டைகள் எல்லாம் இதற்கு முன்பாகவே ஆங்கிலேயர்களால் தரை மட்டமாக்கப் பட்டன.

 இதனால், கோட்டையைத் திரும்பக் கட்டவும், நிர்வாகம் செய்யவும் பணமின்றி, கொள்ளைக்காரனாக மாறினான். மக்களிடம் 84 சதவீத மகசூலை வரியாகப் பெற்றான்.

ஆங்கிலேயனுக்குத் துணிகளை நெய்து வழங்கி வந்த நெசவாளர்களைக் கடுமையாகத் துன்புறுத்தினான்.

அந்த நெசவாளர்களின் பற்களை கட்டபொம்முவின் ஆட்கள் நொறுக்கினார்கள்.  அவர்களின் கண்களில் கள்ளிப்பாலை ஊற்றினார்கள். அவர்களிடமிருந்து பணத்தை எல்லாம் கொள்ளை அடித்தான். 

 

ஆங்கிலேயன் மீது அவன் அடைந்த வெறுப்பு, வேறு விதமாகப் பிரதிபலித்தது. ஆங்கிலேயர் வரி என்று கேட்ட போது, வரி வாங்கித் தான் எனக்குப் பழக்கம். கொடுத்துப் பழக்கமில்லை என்றான்.

  22 நாட்கள், சொக்கப்பட்டி, சேற்றூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பேரையூர், பாவாலி, பள்ளிமடை, கமுதி ஆகிய இடங்களில், ஜாக்சனைப்  பின் தொடர்ந்த பயணத்திற்குப் பின், ராமநாதபுர அரண்மனையில் பேட்டி காணச் சென்ற போது, ஜாக்சன் கட்டபொம்முவை அவமானப் படுத்தினான்.

5-9-1798 அன்று ராமநாதபுர அரண்மனையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சு காரசாரமாகச் சென்று கைகலப்பில் முடிந்தது. கட்டபொம்முவின் உடன் வந்த வீரர்கள், ஆங்கிலேய தளபதி கிளார்க்கை வெட்டிக் கொன்றனர்.

கட்டபொம்முவின் செயலாளரான சுப்ரமணிய பிள்ளை, ஆங்கிலேயரிடம் பிடிபட்டார். திருச்சி சிறையில் அடைக்கபட்டார்.

 ஜாக்சனின் இந்த அத்து மீறலைக் கண்டு, கோபம் அடைந்த ஆங்கிலேயர் ஜாக்சன் மீதே குற்றம் என்று சொல்லி, அவனைப் பணியில் இருந்து நீக்கினர்.

இதனால், சுப்பிரமணிய பிள்ளையும் விடுவிக்கப்பட்டார். ஆனால், ஜாக்சனுக்கு அடுத்து வந்த லூசிங்டன் அவனை விட மோசமாக நடந்து கொண்டான்.

 1799-ஆம் வருடம் செப்படம்பர் 5-ஆம் தேதி, பானர்மேன் தலைமையிலான ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் முன் குவித்து வைக்கப்பட்டது. இதை முன்பே அறிந்த கட்டபொம்மு,

 முதல் நாள் இரவிலேயே, போர் முரசை ஒலிக்க விட்டான். அதனால், பாஞ்சாலங்குறிச்சியைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம், கையில் கிடைத்த ஆயுதங்களுடன், 

கோட்டைக்கு முன்பாக தயாராக நின்றிருந்தனர். இதனை எதிர்பாராத பானர்மேன், கட்டபொம்முவைச் சரணடையச் சொல்லி தூது அனுப்பினான்.

 ஆனால், கட்டபொம்மு அதற்கு உடன்பட மறுத்து விட்டான். இதனால் போர் தொடங்கியது. ஆனால், கட்டபொம்முவின் கோட்டையைச் சுற்றி இருந்த மக்கள் எல்லாம், ஆங்கிலேயர்களைத் திசை திருப்பினர்.

அதனால் அன்றைய போரில் ஆங்கிலேயர் தோல்வி அடைந்தனர். இதனால், கோபம் அடைந்த பானர்மேன், 

அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 6-ஆம் தேதி, பாளையங்கோட்டையிலிருந்து புதிய படைகளை வரவழைத்து போர் செய்தான். போர் மிகக் கடுமையாக இருந்தது.               

கோட்டையிலிருந்து பலர் கடலாடி நோக்கித் தப்பிச் சென்றனர். சுப்பிரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 13-ஆம் தேதி, நாகலாபுரத்தில் சிவசுப்ரமணிய பிள்ளை தூக்கில் இடப்பட்டார்.

அவரது தலையைத் துண்டித்து பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை மதிலின் மேல், செருகி வைத்தனர் ஆங்கிலேயர்.

அடுத்து, கட்டபொம்முவைத் தேடும் படலம் தொடர்ந்தது. அக்டோபர் 1-ஆம் தேதி, கலிப்பூர் காட்டில், கட்டபொம்மு கைது செய்யப் பட்டான். அவன் இருக்கும் இடத்தைத் துரோகிகள் காட்டிக் கொடுத்தனர்.

அக்டோபர் 16-ஆம் தேதி, கயத்தாறு என்ற இடத்தில், திறந்த வெளியில் கட்டபொம்மு தூக்கிலிடப் பட்டான்.

விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவின் வைரலாகும் அரைநிர்வாண புகைப்படம்