2018-ல் புதையல் கிடைக்கும் என முன்பே கணித்த பஞ்சாங்கம் அடுத்து தமிழகத்தில் நடக்கப்போவது என்ன

பஞ்சாங்கத்தில் கணித்த படியே ஆந்திரா மாநிலத்தில் புதையல் கிடைத்துள்ளதால், தமிழகத்தில் புதையல் கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழியும் என்றும் காய்கறிகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும் மா, பலா, தென்னை போன்றவை அதிக அளவில் விளையும், மேலும் தேங்காய் விலை வீழ்ச்சியடையும் என்றும் விளம்பி வருடத்திய பஞ்சாங்கம் கணித்துள்ளது.

மேலும், ஆடி முதல் கார்த்திகை மாதம் வரை நல்ல மழை பெய்யும் என்றும் வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டத்திலும் நில நடுக்கம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதுபோல் தமிழகத்தின் நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அணைகள் நிரம்பி வழியும். தென்மேற்கு பருமழை காலமான ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் பகல், இரவு என்று எல்லா இடங்களிலும் மழைபொழியும் விமானம், இரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும். அதிலும் குறிப்பாக மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் அதிகம் பாதிப்பு ஏற்படும். 

தமிழகத்தின் மழை பிரதேசங்களில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. 
மேலும் நடிப்புத்துறையில் பேரும் புகழும் வாங்கிய ஒரு நடிகர் புதிய அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் அவரால் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது

மாநில அரசு நிலை இல்லாத அரசாகவே நடைபெறும். வங்கிகளில் பெரும் மாற்றம் ஏற்படும். மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடும் என்றும் கணித்துள்ளது. அதே போன்று ஜூலை மாதம் பூமிகாரகன் செவ்வாய் சேர்ந்து இருப்பதால் பூமியில் அரசாங்கத்தில் பலகோடி மதிப்பிலான புதையல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணித்துள்ளது.

தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ள புதையல் ஆந்திராவில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூலை மாதம் தமிழ்நாட்டில் புதையல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரசிகர்களை கவ்விப் பிடித்த டாப் 6 இளம் ஹீரோயின்கள் 2017