எதிர்த்த ஜெ மீறி கையெழுத்து போட்ட எடப்பாடி இனி ரேஷன் கடை

விலை ஏற்றத்தின் எதிரொலியால் இனி நியாயவிலை கடைகளில் உளுந்தப்பருப்பு விநியோகம் இருக்காது என்று சட்டசபை கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலுள்ள ஏழை-எளிய மக்கள் அனைவரும் அதிகம் நம்பி இருப்பது இந்த நியாயவிலைக் கடைகளைத்தான். 

நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு, உளுந்தம்பருப்பு கோதுமை போன்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் மூலம் இந்த கடைகளில் இலவசமாகவும், விலை குறைவாகவும் இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் பெரும்பாலான ஏழை-எளிய மக்கள் நியாயவிலைக் கடைகளைத் தான் பெரிதும் நம்பி வாழ்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 1 ம் தேதி முதல் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது.

இதனால் பொது மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்தது.

இது போன்று பல்வேறு பிரச்சனைகள் எழும் என்ற காரணத்தினால் தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசு கொண்டுவந்த உணவு பாதுகாப்புத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். 

ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

அண்மையில்தான் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது நியாயவிலைக் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்தார்.

அமைச்சரின் இத்தகைய அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் ஏழை-எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலச்சிக்கலுக்கும், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கும் சம்பந்தம் இருக்கா இத படிங்க தெரியும்