பெங்களூருவில் இருந்து வந்த செய்தி சசிகலாவை சந்திக்கும் தினகரன் புறக்கணித்து பெங்களூரு பயணம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் வெற்றிக்களிப்பில் சசிகலாவை சந்தித்து ஆசி பெற பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார்.அப்போது அவரிடம் முகம் கொடுத்து பேசாத சசிகலா அவரை அவமதித்து திருப்பி அனுப்பினார்.வெளியே வந்த தினகரன்,அம்மாவின் நினைவு தினத்தை ஒட்டி சின்னம்மா மௌனவிரதம் இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில்,தற்போது சசியிடம் இருந்து சமிக்கை வந்துள்ளதால் இன்று பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சித்தியை (சசிகலா) சந்திக்க உள்ளார் தினகரன்.இன்று சட்டமன்றக் கூட்டம் இருந்தும் திடீரென தினகரன் பரப்பன அக்ரஹாரா செல்ல வேண்டிய அவசரம் என்ன, அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு தினகரன் சொன்ன பதில், ‘பொங்கலுக்கு முன்பு சித்தியைப் பார்த்து வாழ்த்துச் சொல்லணும். நாளைக்கு விட்டுட்டா ஐந்து நாட்கள் லீவு வந்துடும். அதனால் நாளைக்கே பார்த்தாகணும்’ என்று சொல்லி இருக்கிறார்.உண்மையில் இதுதான் காரணமா என விசாரித்த போது,

சில தினங்களுக்கு முன் சசிகலாவை பார்க்க பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்ற இளவரசியின் மகன் விவேக் சில விஷயங்களை சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.அதனால் தான் தினகரன் சிறைக்கு சென்ற சமயத்தில் சசிகலா அவரிடம் பேசவில்லையாம்.ஆனால் தினகரனோ அவர் மௌன விரதத்தில் இருப்பதாகச் சொன்னார்.உண்மையில் தினகரன் மீது இருந்த கோபத்தில்தான் அவர் பேசவில்லையாம். 

இத்தகைய சூழலில் தான் சில தினங்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்த விவேக்,தினகரனின் நடவடிக்கைகள் குறித்து பல விஷயங்களை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.இதனை அடுத்தே சிறையில் இருந்தே பெங்களூரு புகழேந்தி மூலம் தினகரனிடம் பேசிய சசிகலா உடனே பார்க்கணும் வரச் சொல்லுங்க...’ என சொல்லி அனுப்பி இருக்கிறார். 

இதனை நம்ப முடியாத தினகரன் நான் போன தடவை போன போது அவங்கதான் பேசவே இல்லையே... இப்போ அவங்கதான் வரச் சொன்னாங்களா?’ என கேட்டு இருக்கிறார் தினகரன். ‘ஆமாங்க.. சின்னம்மாதான் வரச் சொன்னாங்க...’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

சசிகலாவைப் பொறுத்தவரை விவேக்கிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். ஏற்கெனவே ஜெயா டிவி நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்த பிறகு,அவரது திறமையான நிர்வாகத்தால் சேனலுக்கான வியூவர்ஸ் அதிகமாகி இருக்கிறார்கள் என சசிகலாவிடம் சொல்லி இருக்கிறார்கள். விவேக்கின் விருப்பம் ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக அரசியலில் அவரது இடத்திற்கு வரவேண்டும் என்பதுதான். விவேக்கின் அரசியல் வருகை குறித்து சில விஷயங்களை தினகரனுடன் பேச சசிகலா திட்டமிட்டு இருக்கிறாராம். 

அதுமட்டுமின்றி , ஜெயலலலிதா மருத்துவமனையில் சிகிழ்ச்சை பெற்று வந்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாமே தினகரனிடம்தான் இருக்கிறது. இனி எக்காரணம் கொண்டும் எந்த விடியோவும்   வெளியாகிவிடக் கூடாது என நினைக்கிறாராம் சசிகலா. அந்த வீடியோக்களை எல்லாம் உடனடியாக விவேக்கிடம் ஒப்படைக்கச் சொல்லவும் போகிறாராம்.இதற்காகத்தான் தினகரனை பெங்களூரு அழைத்திருக்கிறாராம் சசிகலா.


தினகரன் மீது சசிகலா கோபமாக இருந்தாலும், இருவருக்கும் இடையில் பாலமாக இருப்பது பெங்களூரு புகழேந்திதான். கடந்த முறை சசியை சந்திக்க சென்றபோது விபத்தில் சிக்கிய புகழேந்தி வீட்டுக்குப் போய் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்துள்ளாராம் தினகரன். அப்போது, மனம் விட்டு பேசிய தினகரன் சித்தி என்மேல கோபத்துல இருக்காங்க, எங்க குடும்பத்துல இருக்கறவங்க தான் அவங்க கிட்ட இப்படி தப்பு தப்பா என்ன பத்தி சொல்லிருக்காங்க என புலம்பினாராம்.

அதெல்லாம் விடுங்க சின்னம்மாகிட்ட நான் பேசுறேன். நீங்க தைரியமா போங்க’என சொல்லி அனுப்பி இருக்கிறார் புகழேந்தி. அவர் சொன்னபடியே கடந்த சில தினங்களுக்கு முன்பு பரப்பன ஆக்ராஹாரவுக்கு சென்ற புகழேந்தி சசியிடம் பேசியிருக்கிறார். தற்போது தமிழக அரசியலில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார் தினகரன். மக்களுக்கும் நம் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது.

இன்னும் ௩ மாசத்தில் நீங்க வெளியே வந்திடுவீங்க,நீங்க வந்த உடன் கட்சி உங்கள் கைக்கு வந்துவிடும்.போனவங்க எல்லாம் திரும்பி வந்துடுவாங்க. அதுக்குப் பிறகு யாரை வேண்டுமானாலும் நீங்க நீக்குங்க. இல்லை புதுசா போடுங்க. தினகரனை உங்களோட பிரதிநிதியாகத்தான் கட்சிக்காரங்க நினைக்கிறாங்க.கோபத்த விட்டுட்டு அவர்கிட்ட பேசுங்க என சசியிடம் சொல்லியுள்ளார். சசியும் கொஞ்சம் சமாதனம் ஆனதால், சரி எப்ப வந்து பாக்கனும்னு நான் சொல்கிறேன் என சொல்லி அனுப்பியிருக்கிறார். சொன்னதைப்போலவே, இன்றைய சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாராம்”

தினகரன் மீது சசிகலா கோபமாக இருந்தாலும், இருவருக்கும் இடையில் பாலமாக இருப்பது பெங்களூரு புகழேந்திதான். அண்மையில் விபத்தில் சிக்கிய புகழேந்தியை அவரது பெங்களூரு வீட்டுக்குப் போய் நலம் விசாரித்துவிட்டு வந்தார் தினகரன். அப்போது, சசிகலா கோபத்தில் இருப்பதை புகழேந்தியிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் தினகரன். ‘சின்னம்மாகிட்ட நான் பேசுறேன். நீங்க போங்க..’ என சொல்லி அனுப்பி இருக்கிறார் புகழேந்தி. சொன்னபடியே அவரும் சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசி இருக்கிறார். அப்போது, தினகரன் மீதுள்ள கோபத்தையெல்லாம் புகழேந்தியிடம் கொட்டியிருக்கிறார் சசிகலா. அவரை சமாதானப்படுத்திய புகழேந்திதான், நாளைய சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாராம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அறியப்படாத பக்கங்கள் மிரளவைக்கும் ரகசியங்கள் ஜெயலலிதா வாழ்க்கைப் பற்றி தோழி எழுதிய நூல்