பறைக்குள்ளே கோவில் மறைத்துள்ளதா..? அதிர்ச்சியடைந்த தொல்லியல்துறை... ஒரு கோவிலையே பாறைக்குள் மறைத்து

கட்டிடங்களாக கோயிலைக் கட்டுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் மலைகளைக் குடைந்து கோயில் கட்டமைப்புகளை உருவாக்கினர்.

பல்லவர் காலம் முதல் உருவான கோட்பாடுகள் இவை என்றாலும், பல்லவர்களுக்கு முன்னால் நமது பாண்டிய மன்னர்கள், பிள்ளையார்பட்டியில் குடைவரைக் கோயிலை உருவாக்கினர்.

அந்தப் பழக்கம் தொன்று தொட்டு பாரம்பரியமாக இருந்து வந்தது. அப்படி உருவாக்கப் பட்ட குடைவரைக் கோயில்களில் மிக முக்கியமானது, மதுரைக்கு வடக்கே உள்ள அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் உள்ள ஓவா மலையில் இருக்கும் குடைவரை சிவன் கோயில்.

கழிஞ்சமலை, நாட்டார் மலை, வயிற்று பிள்ளான் மலை, ராமன் ஆய்வு மலை, அகப்பட்டான் மலை, கழுகுமலை, தேன் கூட்டு மலை என ஏழு மலைகள் இந்த அரிட்டாபட்டியில் உள்ளன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களால் உருவாக்கப் பட்டது தான் இந்தக் குடைவரைக் கோயில்.

மிக நேர்த்தியாக இந்தக் குடைவரையில் மூலவராக வீற்றிருப்பது லிங்கமாக காட்சி தரும் சிவபெருமான் தான்.

கருவரைக்கு முன்பாக துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. முன் மண்டபத்திற்கு முன்னால் வடக்கு திசையில் வேறெங்கும் காண இயலாத லகுலீசுவரரின் புடைப்புச் சிற்பம் இந்தக் குடைவரைக் கோயிலின் கூடுதல் அம்சம்.

தமிழ்நாட்டில் வேறெங்கும் காண இயலாத இந்த லகுலீசுவரர் சிவபெருமானின் இன்னொரு அம்சமாகும். சுகாசனத்தில் அமர்ந்து, ஒரு கரத்தை தொடை மீது வைத்தும், மற்றொரு கரத்தில் தண்டம் ஒன்றையும் தாங்கி அமர்ந்திருக்கிறார்.

சைவத்தில், “லகிலீஸ் பசுபதம்” என்ற ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் சிவனை லகுலீசுரர் வடிவில் தான் வழிபடுகிறார்கள். எனவே இந்த மலையில் உள்ள இச்சிற்பம் பெருமை வாய்ந்தது.

தெற்குப் பகுதியில் விநாயகரின் உருவமும், புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. மேற்கு திசை நோக்கிய இந்தக் குடைவரையைச் சுற்றியுள்ள மலைகளும், பாறைகளை ஒன்றன் மீது, ஒன்றாக வைத்தது போல இருக்கும் அமைப்பும், ஹைக்கூ கவிதைகளாகத் தான் தோன்றுகின்றன.

இந்த மலையைச் சார்ந்துள்ள கிராமத்தின் தொன்மையான பெயர் பாதிரிக்குடி. அரிட்டநேமி என்ற முனிவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்ததால் அவர் பெராலேயே, இந்த ஊர் அரிட்டாபட்டி என்றழைக்கப் படுகிறது.

இந்த மலையைச் சுற்றி, இருநூறுக்கும் மேற்பட்ட ஊற்றுகள் உள்;ளன. தேன் கூட்டு மலையில் உள்ள முருகன் ஊற்றில் வருடம் தோறும் வற்றாத ஊற்று நீர் வந்து கொண்டேயிருக்கிறது.

இந்த மலைகளில் இருந்து வரும் இந்த ஊற்று நீரைத் தேக்கி வைப்பதற்காக மலையின் மேல் தருமம், கீழே கொள்ளங்குளம், காமன்குளம் என சிறு சிறு நீர்த் தேக்கங்கள் உள்ளன.

இவை தான் இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இங்குள்ள மலைப் பகுதிகளையும், நீர் ஊற்றுகளையும் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

இந்த மலையில் இருந்து ஒரு கல்லைப் பெயர்க்க கூட யாரையும் அனுமதிப்பதில்லை. இந்தக் குடைவரைக் கோயிலுக்கு நேர் பின்புறம், சமணர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத் தளம் ஒன்றுள்ளது.

இந்தக் குகையில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளனர்.இந்தக் குகைத் தளத்தின் மேலே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்றுள்ளது.

சங்க காலப் பாண்டிய மன்னர்களின் பேராதரவோடு இந்த மலையில் வாழ்ந்த சமண முனிவர்கள் மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்தக் கல்வெட்டிற்கு மேலே, ஆதிநாதர் என்ற தீர்த்தங்கரரின் சிற்பமும் அற்புதமாகக் குடையப் பட்டுள்ளது.கிராமம் என்ற சொல்லிற்கு இலக்கணமாக இன்றும், இந்த ஊரில் உள்ள வீடுகள் எல்லாம் பழமை மாறாமல் இருக்கின்றன.

இளவட்டக் கல் என்றழைக்கப் படும் உருண்டை வடிவமான கல்லும் இந்த ஊரில் காண முடிகிறது. தமிழ் மண்ணின் பெருமை, மற்றும் கலாச்சாரத்தை சங்க காலம் தொட்டு பாரம்பரியமாகப் பாதுகாத்து வருகிறது இந்த அரிட்டாபட்டி.

சிறந்த வீரர் விருதை வென்ற தமிழக வீரர் அஸ்வின்