நிலவே வந்து சென்னை சாலையில் இறங்கிய அதிசயம்... ஒன்றையொன்று முட்டிமோதி சாலையிலேயே சம்பவித்த நிகழ்வு..

நிலவின் சிறப்பம்சமே அதில் இருக்கும் கிண்ணக்குழிகள் என்று கூறுவார்கள். நிலவு முழுவதும் விண்கல்லின் தாக்கத்தால் எங்கு பார்த்தாலும் வட்ட வடிவில் குழியாக காட்சியளிக்கும். இந்த காட்சியை நிலவில் மட்டுமே வெகு சிறப்பாக பார்க்க முடியும்.

ஆனால் இந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக சென்னை சாலைகளில் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. இது இன்றைய அரசின் சரித்திர சாதனைகளில் ஒன்றாக இருக்க போகிறது.

சென்னையில் பெய்த கனமழையினால் சாலையின் நடுவிலும் ஓரங்களிலும் அங்குமிங்குமாக அமைக்கப்பட்டிருக்கும் சாக்கடைக்குழிகள், உயிர் அபாயத்தைத் தருவதாக மாறியுள்ளன.

பொதுவாக முறையில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வட்டக்குழிகள், மழைக்கு முன்னர், ஓரளவுக்குச் சாலையின் மட்டத்துக்கு இணையாக இருந்தன.

கடும்மழையின்போது சாலையில் பெருகியெடுத்த வெள்ளநீருக்கு, இந்த வட்டக்குழிகள் வசதியான போக்குவசதியாக அமைந்தன.

பெருமழையின் வேகத்தைத் தாக்குப்பிடிக்கமுடியாத வட்டக்குழிகளின் சிமென்ட் மூடிகள், துருத்திக்கொண்டும் மேலெழும்பியபடியும் உள்ளன.

மேலும், ஆங்காங்கே மழைநீரால் அரிக்கப்பட்ட சாலைகளில் திடீர் மேடுபள்ளங்களும் உருவாகியுள்ளன. வாகனங்களைச் சறுக்கிவிழ வைக்கும்படியாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை முழுவதும் இறைத்துவிட்டதைப்போல குருணையாகக் கிடக்கின்றன.

இத்துடன் சீராக இருந்த சாலைகளில் திடீர் மேடுபள்ளம் ஏற்பட்டு வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்துகின்றன.

இதனால் வாகனங்கள் உரிய வேகத்தில் செல்லமுடியாமல் ஊர்ந்து போகவேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

நெரிசல் நேரங்களில் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து பின்தொடரும் வாகனங்கள் ஒன்றையொன்று முட்டிமோதி சாலையிலேயே சண்டைகள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

பாகுபலியாக முயற்சி செய்த இளைஞர்: தூக்கி வீசிய யானை!