நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு ஊர்ஜிதம் : இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்வாதி கிரிமினல் ஜெயலலிதா தான்!

கடவுளாக வணங்கிய பாமர மக்களுக்கு ஜெயலலிதா போட்ட நாமம் !!!

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்வாதி கிரிமினல் ஜெயலலிதா தான்..
ஆம் இன்றைக்கு சசிகலா வகையறாக்கள் மீது தொடுக்கபடும் கேள்விகள் அனைத்தும் ஜெயலலிதாவை கேட்கவேண்டியவை, இத்தனை சொத்துக்கள் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் நடந்ததென சொன்னால் ஜெயலலிதா சிறந்த நிர்வாகியென்றோ, எல்லாம் தெரிந்தவரை போல இரும்பு பெண்மணி என்று ஊடகங்கள் கட்டமைத்தது பொய்யென்றல்லா ஆகிவிடும்..

ஜெயலலிதாவிற்கு தெரிந்தே தான் நடந்ததென சொத்துகுவிப்பு வழக்கில் மிக தெளிவாக குன்ஹா தீர்ப்பெழுதியிருந்தார் ஆனால் தமிழகம் காவடி தூக்கியும் மொட்டையடித்தும் .. குற்றவாளியை கொண்டாடியதே ஊடகங்கள் அவர்மீதான பார்வையை அப்பழுக்கற்றவர் போல கொண்டிருந்ததே இதெல்லாம் அயோக்கியத்தனமில்லையா.. சசிகலா மட்டுமே அல்லது அவரது குடும்பத்தை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து ஜெயலலிதாவை புனிதராக்கும் செயல் கயமைத்தனமில்லையா..


.
சசிகலாவை ஒருமுறை என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கூறி வெளியேற்றதை கொண்டாடிய ஊடகம் தான்.. இருவரும் இணைந்த போது இருபெரும் பெண் ஆளுமைகளென கூறியது. ஊடகங்கள் என்றைக்காவது ஜெயலலிதா சசி வகையறாவிற்கு இத்தனை சொத்துக்கள் எப்படி வந்ததென கேட்டதுண்டா?

இன்றைக்கு ஊடகங்களும், சமூகவலைத்தளங்களில் பேசபடும் சங்கதிகளில் எதிலாவது கிரிமினல் ஜெயலலிதாதான் இதற்கெல்லாம் காரணமென்று கூறுகிறதா..இப்போதும் கூட ஜெயலலிதா புனிதராக்க எவ்வளவு முயற்சிகள்.

 அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி குற்றவாளியை கொண்டாடுகிற கேடுகெட்டத்தனத்தை ஏன் யாரும் கேள்விகேட்பதில்லை.. ஜெயலலிதாவிற்காக தீர்ப்பை தாமதபடுத்த முடிகிறதே..அதே அளவுகோல் சசிகலாவிற்கில்லை என்கிற போது ஏன் யாரும் பேச மறுத்தார்கள்.. இதில் வர்ணம் இல்லையா..?

சசிகலாவை தூக்கிபிடிக்கவில்லை மாறாக எல்லாவற்றிக்கும் காரணி கிரிமினல் ஜெயலலிதா என்று சொல்லவேண்டும்.. இந்தியாவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்ற தலைவர் .. முதல்வராக இருக்கும்போதே .. பதவி நீக்கம் செய்யசெய்யபட்டவர்..

உச்சநீதிமன்றம் தண்டித்த குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவுமண்டபம் எழுப்பபடுவதை மக்கள் வரிபணத்தை செலவு செய்வதை கேட்க வக்கில்லாத ஊடகங்கள் .. சசிகலா வகையறாவை மிகபெரிய கொள்ளைக்காரர்கள் போல பேசுகிறது.

சசிகலா குற்றவாளியென்கிற போது ஜெயலலிதாவும் குற்றவாளியென பொது அரங்கில் பேசபடவேண்டாமா..? குற்றம் சாட்டபட்டவர்கள் அல்ல இவர்கள் குற்றம் நிரூபிக்கபட்டு தண்டனை பெற்றவர்கள்.. சசிகலா வகையறாவிடம் கண்டெடுக்கபடும் ஒவ்வொரு தொகையிலும், சொத்திலும் ஜெயலலிதாவின் பங்குமிருக்கிறது.

மாம்பழம் விற்றவர் இன்று கோடிகளில் புரளும் மனிதர்: சாதனை தொழிலதிபரின் கதை