ஆத்தாடி! சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா?

சசிகலா. இந்த பெயரையும் மன்னார்குடியையும் தமிழ் தெரிந்த அல்லது தமிழக அரசியல் தெரிந்த யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். அதேசமயம், சசிகலா குடும்பத்தினரின் சொந்த ஊரான மன்னார்குடி பற்றி மட்டும்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்து வைத்திருக்கிறோம் நம்மில் பலர். ஆனால் உண்மையில் சசிகலாவுக்கு சொந்தமான இடங்களுக்கு அருகே இவ்வளவு இருக்கா என்பது நிச்சயம் பிரம்மிப்பை ஏற்படுத்தும்.


திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மன்னார்குடி. பெரும்பாலும் சசிகலா எனும் பெயருக்காக பிரபலமானதாக கருதப்படும் இந்த மன்னார்குடியில், உலகப் புகழ் பெற்ற கோயில் ஒன்றும் உள்ளது.

Nativeplanet

திருவாரூரிலிருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில், தலைநகர் சென்னையிலிருந்து 310கிமீ தொலைவில் உள்ளது. இந்த கோயிலைப் பற்றி மேலும் அறிய

Chitrinee


மன்னார்குடியிலிருந்து அருகில் ஹரித்ரா நதி, முத்துப்பேட்டை, முடிகொண்டான் கோதண்ட ராமர் கோயில், தியாகராஜசுவாமி கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில் என சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ளன..

Harizen20


தலைநகராம் சென்னை மாநகரில், சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. அதைச் சுற்றிலும் பல இடங்கள் சுற்றுலாவுக்கான சிறந்த இடங்களாக உள்ளன.

Sathyaprakash01

சென்னை வாசிகளுக்கு நிச்சயம் அறிமுகமான இடமாக இந்த பீனிக்ஸ் மால் இருக்கும். சென்னையின் மையப்பகுதியில் வேளச்சேரியில் அமைந்துள்ளது இந்த பீனிக்ஸ் மால். இதில் திரைப்பட அரங்குகள், பல வர்த்தக நிறுவனங்கள் என நிறைய அரங்குகளும் கடைகளும் உள்ளன. சென்னை வாசிகளின் முதன்மையான பொழுதுபோக்கு தளமாகவும் இது உள்ளது.

Nandhinikandhasamy

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பல ஐடி நிறுவனங்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பெயர் பெற்றது. இங்கு சுற்றுலாவுக்காக பெரிய அளவிலான பகுதிகள் எதுவும் இல்லை என்றாலும், பொழுதுபோக்க ஏதுவாக சிறிய சிறிய மால்கள், பூங்காக்கள் அமைந்துள்ளன. புதியதலைமுறை, புதுயுகம், ஜெயாடிவி முதலிய தொலைக்காட்சி அலுவலகங்களும் இங்குதான் அமைந்துள்ளன.

Oneindia Tamil

ஈக்காட்டுத்தாங்கல் சுற்றியும் ஜாபர்கான் பேட்டை, கிண்டி, ராமபுரம் ஆகிய இடங்களைக் கொண்டது. ஆசியாவிலேயே சிறந்த பாலங்களுள் ஒன்றான கத்திப்பாரா இதன் அருகிலேயே அமைந்துள்ளது. ராமபுரம் எம்ஜியார் இல்லம், காசி திரையரங்கம், தாமரை தொழில்நுட்பப் பூங்கா, ஒலிம்பியா தொழில்நுட்பப்பூங்கா என பல இடங்கள் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.

A.arvind.arasu

இந்த இடத்திலிருந்து மிக அருகிலேயே தமிழ்த் திரைப்படங்களுக்குப் பெயர் பெற்ற காசி திரையரங்கம், ஜோதி திரையரங்கம், உதயம் திரையரங்கம் ஆகியன உள்ளன. இந்த பகுதி மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் கலந்துள்ளவை திரையரங்குகள் ஆகும்..

offcial


கத்திப்பாரா பாலம் என்பது ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க பாலங்களுள் ஒன்றாகும். இதன் சிறப்பம்சம் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல அமைந்திருக்கும் இதன் வடிவமாகும். தற்போது இதன் அருகிலேயே மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று அடுக்குகள் இருப்பது காண்பதற்கு வித்தியாசமானதாகவும் உள்ளது.

மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்த கணவர்