முடிந்தது சோலி... கால்குலேட்டரே தடுமாறிய சொத்துமதிப்பு.. பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து என்ன நடக்கப

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்….
    

இன்றைய செய்தித் தாள்களில் முதன்மையானதாக இருந்தது, பெங்களுர் சிறையில் இருக்கும் சசிகலாவின் உறவினர்கள், மற்றும் அவர்களது நிறுவனங்கள், நெருங்கிய நண்பர்கள் உட்பட 187 இடங்களில் ரெய்டு நடந்திருக்கிறது என்ற செய்தி தான்.

1000 வருமான வரி அதிகாரிகள், ஒரே நேரத்தில், களத்தில் இறங்கி அலசியிருக்கிறார்கள். இதைக் கண்டு ஆடித்தான் போய் விட்டிருக்கிறது சசிகலாவின் குடும்பம்.

இவர்களை  நம்பி உள்ள 18 எம்.எல்.ஏ-க்களின் நிலையும் கேள்விக்குறியாக இருக்கிறது. “இதெல்லாம் எங்களைப் பயமுறுத்த மத்திய அரசு நடத்தும் நாடகம”; என வெளியில் சொல்லிக் கொண்டாலும்,

உள்ளுக்குள் உதறல் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. பெரிய முதலைகளே சிக்கும் போது, சின்ன மீன்களாகிய தங்களின் கதி என்னவென்று ஆளாளுக்கு ரகசியமாக ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
    

சாதாரண நிலையில் இருந்த சசிகலாவின் குடும்பமும், அவரைச் சுற்றியுள்ள உறவுகளும், ஜெயலலிதாவுடன் சசிகலாவுக்கு ஏற்பட்ட நட்பினால், கூரையைப் பொத்துக் கொண்டு அதிர்ஸ்டம் கொட்டியது போல், பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி கண்டனர்.

அவர்களின் சொத்து மதிப்புகளைக் கணக்கிட கால்குலேட்டரே தடுமாறும் அளவிற்கு செங்குத்தான மலையின் உச்சிக்கு, மந்திரப் பாயில் பறந்து சென்றதைப் போல, எந்தவித முதலீடு மற்றும் ரிஸ்க் எடுக்காமல், சென்று விட்டனர்.
    

இப்போது, மலை உச்சியின் மேலே இருக்கும் அசுர சக்தி ஒன்று துரத்திக் கொண்டிருக்கிறது. இனி எப்படி இந்த மலை உச்சியிலிருந்து இறங்குவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே! ஜெயலலிதா இறந்தவுடன், எப்படியும் தமிழகத்தின் முதல் அமைச்சராக ஆகி விடலாம் என்று சசிகலா நகர்த்திய காய்கள், அவரையே ஆட்டத்திலிருந்து காலி செய்து விடும் அளவிற்குப் போகும்; என்பதைக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

தோசையைத் திருப்பிப் போடுவது போல, நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக இருப்பதைக் கண்டு, அடுத்து என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன.
    

சசிகலா சிறைக்குச் சென்றதும், அவரால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்று நியமிக்கப் பட்ட அவரது அக்கா மகன் தினகரன், எப்படியாவது, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வென்று முதல் அமைச்சராகி விடலாம் என்று கனவு கண்டார்.

ஆனால், இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டது. அது மட்டுமில்லாமல், அவர் கைவசம் இருந்த எடப்பாடி அணி தங்களது ஆட்சி இருக்கைகளைக் காப்பாற்றிக் கொள்ள, தினகரனை நைசாகக் கழட்டி விட, 18 எம்.எல்.ஏ-க்களைக் கையில் வைத்துக் கொண்டு, ஆட்சியைக் கவிழ்க்க நினைக்க, நடப்பது வேறாக இருக்கிறது.

இதை எண்ணி நிதானமாக கவலைப்படத் துவங்கியுள்ளார் தினகரன், என்று அவரைச் சுற்றியுள்ளவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
    

தமிழக அரசியலில் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு காட்சியும், பரமபதம் விளையாட்டை மிஞ்சும் அளவிற்கு வேகமாக இல்லா விட்டாலும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு சுவராசியமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சர்களிடையே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. 

“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை” என்ற அமர கவி கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.
    

ஆனால், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் என்ன முடிவு என்பதில் தான், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எதிர்கால நடவடிக்கையும் அமையப் போகிறது என்பது தான் நிதர்சனம்!

பிக்பாஸ் 2-வில் பங்கேற்க அழைப்பு -தெறித்து ஓடிய பிரபல நடிகை