தீ பரவுவதற்கு முன்னரே,சென்ற மீடியாக்கள்..!! திடீர் அரசியல் ஆர்ப்பாட்டம் நடக்ககாரணம் என்ன..?

இசக்கிமுத்து 1,45,000 கடன் வாங்கியிருக்கிறார். 2,34,000 பணம் திரும்ப கொடுத்து இருக்கிறார்..இவ்வளவு வட்டி கட்ட கூலி தொழிளாளி என்ன செய்ய முடியும்?

பாவம் மேலும் சுமை தாங்க முடியாமல் மிரட்டலுக்கும் பயந்து பதறி காவல் துறையிடம் சென்றிருக்கிறார் ஒரு முறை இரு முறை அல்ல 5 முறை. எந்த நடவடிக்கையும் இல்லை என்பது மிக முக்கியமானது.

யாருக்காக இந்த சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள்..?

2003- ல் கந்து வட்டி தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இன்று முதல் நடைமுறையில் உள்ளது. ஏன் இச்சட்டம் இவர்களை பாதுகாக்கவில்லை.? சம்பவம் நடைபெறும் போது ஊடகத்தினர் வேறொரு அரசியல் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்தனர் என்பது குறிபிடதக்கது..

அலறல் சத்தம் மற்றும் பரபரப்பு ஏற்பட்ட பின்னரே அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மீடியா ஆட்கள் தான்..

அரசு ஊழியர்கள், மற்றும் மனுச் செய்ய வந்தவர்கள், அருகில் இருந்த காவல்துறையினர் அலறி அடித்து ஓடியிருக்கின்றனர்.

பொதுவாகவே திங்கள் கிழமை மனுநீதி நாள் அப்பொழுது மனுச் செய்ய ஏராளமானவர்கள் வருவது இயல்பு.

இசக்கிமுத்து போல வருபவர்களை அடையாளம் கண்டு காவல்துறையிடம் எச்சரிக்கை செய்து காப்பாற்று பவர்களே மீடியாகாரர்கள் தான்.

பணத்தை முதலீடாக போட்டு பணஅறுவடை செய்யும் தொழில் செய்பவர்கள் நல்லவர்கள், நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் நல்லவர்கள், கண்டுக்காத ஆட்சித் தலைவர் நல்லவர்,

மக்களை இந்த நிலையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் நல்லவர்கள் , பேஸ்புக் மற்றும் வாட்ஸப்களில் புரட்சி பேசுறகிறவர்கள் நல்லவர்கள்...,

சம்பவத்தை பார்த்து பதறி போய்  இசக்கி முத்து குடும்பத்திற்கு கண்ணீரோடு உதவ ஓடிய பத்திரிக்கையாளனை தவறானவர்கள்  என விமர்சனம் செய்ய ஒரு கூட்டம் திரிகிறது, எதற்காக..?

எலுமிச்சை பழத்தின் தோலில் கூட… இப்படி ஒரு அற்புதம் இருக்கு தெரியுமா?